Skip to main content

Doctor Vikatan: குளிர்காலத்தில் படுத்தும் மூட்டுவலி: உண்மையா, பிரமையா... சிகிச்சை உண்டா?

Doctor Vikatan: என் வயது 50. குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே மூட்டுவலியால் பெரும் அவதிக்குள்ளாகிறேன். என்னால் இயல்பாக எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை.  குளிர்காலத்தில் இப்படி வலி அதிகரிக்க என்ன காரணம்...  இதைத் தவிர்க்கவும், வலி அதிகமாகும்போது சமாளிக்கவும் என்னதான் செய்வது?

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

நித்யா மனோஜ்

குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகரிப்பது என்பது உண்மையா அல்லது வெறும் மனப்பிரமையா என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், குளிர்காலத்தில் ஏற்படுகிற மூட்டுவலி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதுதான்.

 நம் மூட்டுகள் சுலபமாக அசைவதற்கு அவற்றுக்கிடையே 'சயனோவியல் திரவம்' (Synovial Fluid) என்ற ஒரு திரவம் உள்ளது. இது எலும்புகளுக்கு இடையே ஒரு குஷன் (Cushion) போலச் செயல்படுகிறது. குளிர் காலத்தில் இந்தத் திரவத்தின் அடர்த்தி (Viscosity) அதிகரிப்பதால், மூட்டுகளை அசைக்கும்போது உராய்வு (Friction) அதிகமாகி வலி ஏற்படுகிறது.

மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகள், எலாஸ்டிக் போலச் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. குளிர் காலத்தில் இந்த நெகிழ்வுத்தன்மை (Elasticity) குறைவதால், ஏற்கெனவே வலியுடன் இருக்கும் மூட்டுகளில் இறுக்கம் (Stiffness) உண்டாகிறது.

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

குளிர்ச்சியான சூழலில் நம் உடலில் வலியை உணர்த்தும் நரம்பு முனைகள் (Nerve endings) அதிக உணர்திறன் (Sensitive) கொண்டவையாக மாறுகின்றன. இதனால் சிறிய வலி கூட மிகப் பெரிய வலியாக உணரப்படுகிறது.

குளிர் காலத்தில் நம்  உடலில்  கை மற்றும் கால் விரல் நுனிகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. ரத்த ஓட்டம் குறைவதால் தசைகளுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. மேலும், அங்கு சேரும் மெட்டபாலிக் கழிவுகள் வெளியேற தாமதமாவதும் வலி அதிகரிக்க ஒரு காரணமாகிறது.

குளிர்காலத்தில் அனுபவிக்கும் இந்த வலியைச் சமாளிக்க, எளிமையான சில விஷயங்களைப் பின்பற்றலாம். குளிர் நேரடியாகத் தாக்காதவாறு கைகளுக்கு கிளவுஸ்  அணிவது,  இரவில் தூங்கும்போது கால்களுக்கு சாக்ஸ்  அணிவது போன்றவை வலியைத் தடுக்க உதவும்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், மூட்டு இறுக்கத்தைக் குறைக்கவும் மூட்டுகளை அசைத்துக் கொண்டே இருப்பது மிகவும் அவசியம்.

நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் வலியைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் வலியைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒரே வேளையில் நீண்ட நேரம் நடப்பதற்கு பதிலாக, காலை ஒருமுறை, மாலை ஒருமுறை எனப் பிரித்து நடப்பது அதிக பலன் தரும். ருமட்டாய்டு (Rheumatoid) போன்ற பாதிப்பு உள்ளவர்கள்,  குளிர் காலத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளின் அளவைச் சிறிது மாற்றியமைக்க வேண்டியிருக்கலாம். அது குறித்து மருத்துவரிடம் பேசி ஆலோசனைகள் பெறலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...