Relationship 'இட் இஸ் மை பர்சனல்' என்று சொல்வது தம்பதிக்கு இடையே அதிகரித்திருக்கிறது. இந்த அணுகுமுறை அளவுக்கு மீறிப் போகும்போது, இந்த மனப்பான்மையே விரிசலுக்குக் காரணமாகிவிடுகிறது. சமூக ஊடகங்கள் இணையிடம் தோன்ற ஆரம்பிக்கும் ஒளிவு, மறைவுகள் தம்பதியிடையே சந்தேகத்தை எழுப்பி உறவை உடைக்கக் காரணமாகின்றன. காதல் விட்டுக்கொடுத்தல் என்கிற வார்த்தையே கிட்டத்தட்ட மறைந்துகொண்டிருக்கிறது. விட்டுக்கொடுத்தல் நல்ல விஷயம் என்று தெரிந்தவர்கள்கூட, 'அதை அவ பண்ணட்டுமே/அவன் பண்ணட்டுமே' என்றுதான் நினைக்கிறார்கள். Relationship சினிமாக்களில் வேண்டுமானால் ஈகோ கொண்ட நாயகனும் நாயகியும் முடிவில் இணைந்துவிடுவார்கள். ஆனால், நிஜத்தில் பெரும்பாலும் இது சாத்தியப்படுவதில்லை. காதலோ, திருமணமோ... உறவை உடைக்கிற உலகின் மிகப்பெரிய சுத்தியல் ஈகோ. Relationship இன்றைய டெக்னாலஜி விரல் நுனியில் விஷயங்களைத் தந்துவிடுவதால், 'எனக்கு எல்லாம் தெரியும்' என்கிற மனப்பான்மையைப் பெரும்பாலானவர்களிடம் ஏற்படுத்தி...