'இட் இஸ் மை பர்சனல்' என்று சொல்வது தம்பதிக்கு இடையே அதிகரித்திருக்கிறது. இந்த அணுகுமுறை அளவுக்கு மீறிப் போகும்போது, இந்த மனப்பான்மையே விரிசலுக்குக் காரணமாகிவிடுகிறது.
இணையிடம் தோன்ற ஆரம்பிக்கும் ஒளிவு, மறைவுகள் தம்பதியிடையே சந்தேகத்தை எழுப்பி உறவை உடைக்கக் காரணமாகின்றன.
விட்டுக்கொடுத்தல் என்கிற வார்த்தையே கிட்டத்தட்ட மறைந்துகொண்டிருக்கிறது. விட்டுக்கொடுத்தல் நல்ல விஷயம் என்று தெரிந்தவர்கள்கூட, 'அதை அவ பண்ணட்டுமே/அவன் பண்ணட்டுமே' என்றுதான் நினைக்கிறார்கள்.
சினிமாக்களில் வேண்டுமானால் ஈகோ கொண்ட நாயகனும் நாயகியும் முடிவில் இணைந்துவிடுவார்கள். ஆனால், நிஜத்தில் பெரும்பாலும் இது சாத்தியப்படுவதில்லை. காதலோ, திருமணமோ... உறவை உடைக்கிற உலகின் மிகப்பெரிய சுத்தியல் ஈகோ.
இன்றைய டெக்னாலஜி விரல் நுனியில் விஷயங்களைத் தந்துவிடுவதால், 'எனக்கு எல்லாம் தெரியும்' என்கிற மனப்பான்மையைப் பெரும்பாலானவர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. இதுவும்கூட உறவில் இணக்கத்தைத் தகர்க்கக்கூடிய விஷயம்தான்.
'நான் என்ன சொல்ல வர்றேன்னா' என்கிற நாம், 'நீ என்ன சொல்ல நினைக்கிற' என்று அட்லீஸ்ட் ஒரு காதையாவது துணைக்குக் கொடுத்தால், ரிலேஷன்ஷிப் வலுவாக இருக்கும். இல்லையென்றால், பிரச்னைதான்.
காலை முதல் மாலை வரை அணிகிற உடையில்கூட 'செளகர்யமாக உணர்வது' அவசியம். வாழ்க்கை முழுக்க ஒரு வீட்டுக்குள் வசிப்பவர்களுக்கு, இந்த செளகர்யம் அவசியமோ அவசியம்.
'அய்யோ... வீட்டுக்குப்போன அந்த முகத்தைப் பார்க்கணுமே' என்கிற அளவுக்குத் துணையின் மனதில் உங்கள் மீதான எரிச்சல் இல்லாதிருப்பது அவசியம்.
துணையின் விருப்பங்களை, ரசனைகளை உங்கள் விருப்பங்கள், ரசனைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டாதீர்கள். அவரவர் ரசனை அவரவர்க்கு உசத்தி.
காதலிலும் சரி, கல்யாணத்துக்குப் பிறகும் சரி... ஒருவரையொருவர் மதித்து நடந்துகொள்வது எந்தக் காலத்திலும் ரிலேஷன்ஷிப்புக்கு நல்லது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
Comments
Post a Comment