சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு நெருக்கமாகத் திகழ்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு திடீரெனக் காணாமல் போன நிலையில், தற்போது அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் அதிபர் ஜி ஜின்பிங். ஏற்கெனவே இதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர் காணாமல் போனதும், அவர் பதவிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், சீனாவில் திடீரென்று அமைச்சர்கள் காணாமல் போவதும், அவர்கள் பதவி பறிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருவது சீன மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.சீன அதிபர் ஜி ஜின்பிங் முதலில் காணாமல் போன வெளியுறவுத்துறை அமைச்சர்: சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் கேங்(Qin Gang) கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து காணாமல் போனார். கடைசியாக ஜூன் 25-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்ட கின் கேங் அதன்பிறகு நடைபெற்ற எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் தென்படவில்லை. சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்ட பிறகுதான் இப்படியொன்று நிகழ்ந்ததே வெளியுலகிற்கு தெரியவந்தது. ஒரு மாதம் கடந்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங்...