Skip to main content

``பதவிக்காக சூடு, சொரணையை இழந்துவிட முடியாது..!” - கருணாஸ் பளீச்

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது, எந்த கூட்டணியில் உங்களை எதிர்பார்க்கலாம்?”

“நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். தேர்தல் வருகிறது என்றால் உடனே எந்த கூட்டணிக்கு போவது, எத்தனை சீட்டு வாங்குவது என்ற மனநிலையே எனக்கு இல்லை. எனக்குத் தேவைப்பட்டால் நான் நிற்பேன். அதற்கு கூட்டணி வேண்டுமென்ற அவசியமும் இல்லை.”கருணாஸ்

“ஒவ்வொரு தேர்தலில் நிற்கும் எண்ணமே இல்லை என்றால் உங்கள் அரசியல் கட்சி எதற்காகத்தான்?”

“வி.சி.க, பா.ம.க, கொ.ம.தே.க, புதிய தமிழகம், த.ம.மு.க, சிறுபான்மை கட்சிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் எங்களுக்கு இல்லை. அதை எங்கள் இளைஞர்களிடம் உணர்த்தி, உரிமைகளுக்கான குரல் கொடுப்போம்.”

“நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று உங்கள் ஆதரவாளர்களுக்கு நீங்கள் சொல்லித்தானே ஆக வேண்டும்?”

“கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க-வால் ஏற்பட்ட அவல நிலைகளை எல்லோரையும் போல நானும் உணர்ந்திருக்கிறேன். எதிர்கால தலைமுறையிடம் ஒரு பாதுகாப்பான இந்தியாவை கொடுக்க வேண்டும். அதானியிடமோ, அம்பானியிடமோ கொடுத்துவிட்டு போக முடியாது. எனவே அந்த சூழலை மனதில் வைத்து நல்ல முடிவு எடுப்பேன். ”இந்தியா கூட்டணி

“அப்படியானால் இந்தியா கூட்டணிக்குத்தான் ஆதரவு என்று எடுத்துக்கொள்ளலாமா?”

“அதை இப்போது சொல்ல முடியாது. பா.ஜ.க-வுக்கு எதிராக தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் காக்க வேண்டும். அதற்காக தி.மு.க அணிக்கு வாக்களிக்கும் சூழல் ஏற்பட்டால் கூட, அவர்கள் மீதான தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. தேர்தல் நெருங்கி இந்திய அளவில் உறுதியான ஒரு நிலைப்பாடு உருவாகும்போது, எங்கள் முடிவையும் எடுப்போம்.”“அ.தி.மு.க., பா.ஜ.க-வுக்குப் பாடம் புகட்டுவோம்!” - கடுகடுக்கும் கருணாஸ்

“ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சட்டசபையில் இணைந்து செயல்பட்ட கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மூவருமே எந்த கூட்டணிக்கும் போக முடியாததன் பின்னணியில் வேறு காரணங்கள் எதாவது இருக்கிறதா?”

“மானங்கெட்டுப்போன அரசியல் மாண்புமிகு ஆக வேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். பதவிக்காக சூடு, சொரணையை இழந்துவிட முடியாது. வன்னியர் இடஒதுக்கீடு முறையாக கணக்கெடுத்து கொடுக்காமல், அந்த மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று நேரடியாக குற்றம்சாட்டிவிட்டுத்தான் அ.தி.மு.க-வில் இருந்து வெளியேறினேன். யாரும் என்னை கழட்டிவிடவில்லை, நானாகத்தான் முடிவெடுத்து வெளியேறினேன். பிறகு தி.மு.க கூட்டணியில் சீட் கேட்டேன், கொடுக்கவில்லை. அதற்காக நான் கவலைப்படும் ஆள் இல்லை.”முதல்வர் ஸ்டாலின் - உதயநிதி

“சரி, தி.மு.க ஆட்சி இரண்டரை ஆண்டுகளை நிறைவுசெய்யப்போகிறது. உங்கள் மதிப்பீடு என்ன?”

“என்னைப் பொறுத்தவரையில் தி.மு.க ஆட்சி அவர்கள் குடும்பத்திற்கான ஆட்சி. இது மக்களுக்கான ஆட்சியா இல்லையா என்பதை நீங்கள் மக்களிடம்தான் கேட்க வேண்டும்.”

“மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், கட்டணமில்லா பயணம் போன்றவை மக்களுக்கானது இல்லையா?”

“ஆயிரம் ரூபாய்க்கு ஆயிரெத்தெட்டு கண்டிஷன். இது ஒரு புரட்சிகர திட்டமா? 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தினால் அது புரட்சிகரமான திட்டம். மக்களுக்கு கொடுப்பது 1,000 ரூபாய்தான். அதில் என்ன மக்களின் மக்களின் வாழ்வாதாரம் மாறிவிடுமா? ஒவ்வொரு துறையிலும் 25% கமிசன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாக இருக்கும் கட்டடங்களை இடித்துவிட்டு, புதிதாக கட்டுவதை எல்லாம் பார்க்க முடிகிறது. ஏன் கமிஷன் வாங்கத்தானே இதெல்லாம்?”

“சினிமா துறையில் தி.மு.க-வின் சர்வாதிகாரம் பெருகிவிட்டது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருக்கிறாரே?”

“தமிழ் சினிமா கார்ப்பரேட் கைகளுக்கு போய்விட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரு தயாரிப்பாளர்கள்தான் தன்னிச்சையாக இருக்கிறார்கள். தியேட்டர்களும் சிண்டிகேட் போல மாறிவிட்டன. எனவே தனிப்பட்ட ஒருவரை குறைசொல்ல முடியாது.”ரெட் ஜெயண்ட்

“ரெட் ஜெயிண்ட் மூவீஸ் அதிக திரைப்படங்களை வாங்குவதை வைத்து ஜெயக்குமார் இந்த விமர்சனத்தை வைக்கிறாரே?”

“அதிகாரம் அவர்கள் கையில் இருக்கும்போது இது சாதாரணமானதுதானே! முதல்வரின் மகன், அமைச்சரின் நிறுவனம் என்றால் திரையரங்க உரிமையாளர்கள் அவருக்குத்தானே முன்னுரிமை கொடுத்து செல்வார்கள்? மனித இயல்பே அதுதானே! ஆனால் அடித்து, மிரட்டிப் பிடுங்குகிறார்கள் என்று சொல்வதெல்லாம் பொய்ப்பிரசாரம். திரையரங்க உரிமையாளர்களுக்கு உரிய பங்கீட்டை கொடுத்துவிடுகிறார்கள், யாரையும் ஏமாற்றுவதில்லை.”

“ஒரு சில பெரு நிறுவனங்களே அதிக படங்களை வெளியிட்டால், சிறு தயாரிப்பு நிறுவனங்கள் என்ன ஆவது?”

“சிறிய நிறுவனங்கள் நாசமாகப் போகட்டும், யாருக்கு என்ன கவலை? அவரவர்கள் பிழைக்க வேண்டுமென்றுதான் எல்லோரும் பார்ப்பார்கள். தியாகராய நகரில் நீங்கள் ஒரு பெரிய துணிக்கடை வைத்தால், அங்கிருக்கும் 4 சிறிய கடைகளை பற்றி நீங்கள் கவலைப்படுவீர்களா? 4 சிறிய கடைகள் அழிந்தால்தான் ஒரு பெரிய கடை செழிக்கும். அப்படித்தான் எல்லா தொழிலும் இருக்கிறது.”அண்ணாமலை

“சரி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?”

“எனக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றி எந்த கருத்தையும் சொல்வதற்கு நான் தயாராக இல்லை”

“பெரியார், அண்ணா, முத்துராமலிங்கத் தேவர் என பல மறைந்த தலைவர்களை பற்றி எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறாரே?”

“படித்தவர்கள் எல்லாம் புத்திசாலி இல்லை. ஹீரோ ஆங்கிலத்தில் 4 வரிகளைப் பேசிவிட்டால் தியேட்டரில் என்னவென்றே புரியாமல் கூட கை தட்டுவார்கள், அதுபோலத்தான் இருக்கிறது. யாராக இருந்தாலும் கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலக அளவு.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
மலேசியாவில் ஹோட்டல் ஆரம்பிக்கப் போறேன்! - மகிழும் கருணாஸ்


http://dlvr.it/Sxynr7

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...