Skip to main content

`Where is Yair’ - வைரலான நெதன்யாகு மகன்; கேள்வி எழுப்பும் ராணுவ வீரர்கள் - சிக்கலில் இஸ்ரேல் பிரதமர்

கடந்த 2 வாரங்களாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போராளிக் குழுவுக்கு மத்தியிலான போரில் இஸ்ரேலின் தாக்குதலில் தற்போது வரை, 2,360 குழந்தைகள் உட்பட 5,791 பேரும், இஸ்ரேலியர்கள் 1400 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நேற்று காஸா மீது நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ஐ.நா பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது. அதில், போர் நிறுத்ததுக்கான கோரிக்கையை உலகநாடுகள் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இஸ்ரேலின் பிரதமர் மகன் குறித்த தகவல் இஸ்ரேல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - அவரது மகன் யாயிர் நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், அவரது மூன்றாவது மனைவி சாராவுக்கும் பிறந்த மகன் யாயிர் (32). இஸ்ரேலில் கடும் போர் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் இஸ்ரேலில் இல்லாமல் அமெரிக்காவில் உல்லாசமாக பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார் என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் அவர் இருக்கும் புகைப்படத்தை தனது வலைதளப்பக்கத்தில் பகிர்ந்ததின் மூலம் இந்த செய்தி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இஸ்ரேலில் கட்டாய ராணுவ சேவை இருக்கிறது. இதில் பணியாற்றி ஓய்வு பெற்ற பலரும் தற்போது நடைபெற்று வரும் போருக்காக நாடு திரும்பி ராணுவத்தில் இணைந்துவரும் நிலையில், இவர் மட்டும் போரின் போது நாட்டில் இல்லாமல் உல்லாசமாக இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பொதுவாகவே அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் யாயிர் நெதன்யாகு 2018-ல் 'அனைத்து இஸ்லாமியர்களும் வெளியேறும் வரை இஸ்ரேலில் அமைதி இருக்காது' என்று கருத்து பதிவிட்டு கடும் கண்டனத்துக்கு உள்ளானார். அப்போதே அவரது பேஸ்புக் கணக்கு 24 மணி நேரம் முடக்கப்பட்டது. அதன்பிறகு, "இஸ்ரேலின் பிரதமரும் எனது தந்தையுமான பெஞ்சமின் நெதன்யாகு, ஒரு தொழிலதிபருக்கு உதவுவதற்காக 20 பில்லியன் டாலர் எரிவாயு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தார்" என வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, நெதன்யாகு தனது மகனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். யாயிர் நெதன்யாகு

அதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன், இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக தகவலை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பினார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் யாயிருக்கு 34,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அவரது தொடர் சர்ச்சைகளை தொடர்ந்தே நெதன்யாகு மற்றும் அவரது மனைவி வற்புறுத்தலால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் புளோரிடாவுக்கு சென்றார். ஆனால், போர் சூழலிலும் நாடு திரும்பாமல் இருந்து வருகிறார்.

இந்த விவகாரம் குறித்து இஸ்ரேலுக்காக போரில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் ஒருவர் Times பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,"யுத்தக் களத்தில் நாங்கள் இருக்கும்போது யாயிர் மியாமி கடற்கரையில் உல்லாசம் அனுபவித்துவருகிறார். இஸ்ரேலின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் நாங்கள் அல்ல. ஆனாலும், நாங்கள் குடும்பம், வேலை என அனைத்தையும் விட்டு போரில் ஈடுபட்டுவருகிறோம். ஆனால் அவர்...." என விமர்சித்திருக்கிறார்.அமெரிக்காவில் யாயிர் நெதன்யாகு

காஸா எல்லையில் போர் களத்தில் இருக்கும் ராணுவ வீரர், "நான் ராணுவத்தில் இல்லை. வேறொரு பணி செய்துகொண்டிருந்தேன். ஆனால், குடும்பம், வேலையை விட்டுவிட்டு இந்த நெருக்கடியான நேரத்தில் எனது நாட்டு மக்களை கைவிடக் கூடாது என்பதற்காக போரில் கலந்துகொண்டேன். ஆனால், பிரதமரின் மகன் எங்கே... அவர் ஏன் இஸ்ரேலில் இல்லை? இஸ்ரேலியர்கள் ஒருங்கிணைந்து இருக்க வேண்டிய நேரமிது. பிரதமரின் மகன் உட்பட ஒவ்வொருவரும் இப்போது இங்கே போர் பணி புரிய வேண்டும்" எனக் காட்டமாக தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இஸ்ரேலிய ஊடகங்கள் "Where is Yair" எனச் செய்தி வெளியிட்டுவருகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
`சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்' - கொதித்த ஐ.நா பொதுச்செயலாளர்... பதவி விலக வலியுறுத்தும் இஸ்ரேல்!


http://dlvr.it/Sxynk7

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...