Tamil News Today Live: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று சென்னைக்கு வருகிறார்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று சென்னைக்கு வருகிறார்!
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று சென்னைக்கு வருகிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை, அவர் கலந்துகொள்ளும் விழா நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பெங்களூரிருந்து விமானம் மூலம் இன்று மாலை 6 மணிக்கு சென்னைக்கு வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் வரவேற்கின்றனர். பின்னர், கிண்டி ஆளுநர் மாளிகைக்கு காரில் செல்லும் முர்மு, இன்று இரவு அங்கு தங்குகிறார். நாளை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 8-வதுபட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் பிற்பகல் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
http://dlvr.it/Sxyng9

Comments
Post a Comment