மக்களின் கலர் டிவி மோகம்: மகாராஷ்டிரா மாநிலம் அஹமத் நகரில் பிறந்தவர் வேணுகோபால் தூத். முன்னதாக அவருடைய தந்தை நந்த்லால் மாதவ்லால் தூத், 'வீடியோகான்' குழுமத்தைத் தொடங்கியிருந்தார். பின்நாளில் தனது தந்தையின் குழுமத்தை விரிவுபடுத்தி, மாபெரும் தொழிலதிபராக மாற வேண்டும் என்ற ஆசை வேணுகோபால் தூத்தை தொற்றிக்கொண்டது. அந்த நேரத்தில்தான் 'தூர்தர்ஷன்'னும் தன் தொலைக்காட்சி சேவைகளைக் கறுப்பு - வெள்ளையில் இருந்து வண்ணத்துக்கு மாறிக்கொண்டிருந்தது. மக்களும் ஆர்வமாக கலர் தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கி பயன்படுத்தத் தொடங்கினார்கள். எனவே இந்த துறையில் கால் பதிப்பதன் மூலம் மாபெரும் வெற்றியைப் பெறலாம் எனத் திட்டமிட்டார், தூத். வேணுகோபால் தூத் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: மேலும் இதற்காக ஜப்பானுக்குச் சென்று பிரத்தியேகமாகப் படித்தார். தனியாகத் தொலைக்காட்சி பெட்டிகளைத் தயாரிக்க முடியாது என்பதால், அந்த துறையில் கோலோச்சி வரும் ஜப்பான் நாட்டை சேர்ந்த 'தோஷிபா' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இறுதியாக 1986-ம் ஆண்டு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பில் 'வீடியோகான்' ...