Skip to main content

'கலர் டிவி விற்பனை டு ஐசிஐசிஐ வங்கி மோசடி வரை' - வீடியோகான் வேணுகோபால் தூத் கைதின் பின்னணி என்ன?!

மக்களின் கலர் டிவி மோகம்:

மகாராஷ்டிரா மாநிலம் அஹமத் நகரில் பிறந்தவர் வேணுகோபால் தூத். முன்னதாக அவருடைய தந்தை நந்த்லால் மாதவ்லால் தூத், 'வீடியோகான்' குழுமத்தைத் தொடங்கியிருந்தார். பின்நாளில் தனது தந்தையின் குழுமத்தை விரிவுபடுத்தி, மாபெரும் தொழிலதிபராக மாற வேண்டும் என்ற ஆசை வேணுகோபால் தூத்தை தொற்றிக்கொண்டது.

அந்த நேரத்தில்தான் 'தூர்தர்ஷன்'னும் தன் தொலைக்காட்சி சேவைகளைக் கறுப்பு - வெள்ளையில் இருந்து வண்ணத்துக்கு மாறிக்கொண்டிருந்தது. மக்களும் ஆர்வமாக கலர் தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கி பயன்படுத்தத் தொடங்கினார்கள். எனவே இந்த துறையில் கால் பதிப்பதன் மூலம் மாபெரும் வெற்றியைப் பெறலாம் எனத் திட்டமிட்டார், தூத்.

வேணுகோபால் தூத்

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு:

மேலும் இதற்காக ஜப்பானுக்குச் சென்று பிரத்தியேகமாகப் படித்தார். தனியாகத் தொலைக்காட்சி பெட்டிகளைத் தயாரிக்க முடியாது என்பதால், அந்த துறையில் கோலோச்சி வரும் ஜப்பான் நாட்டை சேர்ந்த 'தோஷிபா' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இறுதியாக 1986-ம் ஆண்டு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பில் 'வீடியோகான்' குழுமம் களம் கண்டது. மெல்ல, மெல்ல கலர் டிவி துறையில் தனக்கென தனி இடம் பிடித்தது. அப்போது ஆண்டுக்கு 1 லட்சம் 'டிவி'கள் விற்பனையானதாகக் கூறப்பட்டது.

பின்னர் இந்த அனுபவத்தைக் கொண்டு 1990-களில் பிரிஜ், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் தயாரிப்பிலும் கவனம் செலுத்தியது. தான் நினைத்தது போலவே வெற்றிவாகையும் சூடியது. பிறகு மொபைல் போன் சேவையில் வீடியோகான் நிறுவனம் இயங்கியது. இதுவரை வெற்றி மட்டுமே பெற்று வந்த அந்த நிறுவனத்தின் வீழ்ச்சி இங்கிருந்து தான் தொடங்கியது. அப்போது நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

உச்சநீதிமன்றம்

தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் வழக்கு:

இதில் 21 லைசென்சுகள் வீடியோகான் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இதனால் வேணுகோபால் தூத் அதிர்ச்சியைச் சந்தித்தார். மறுபுறம் உலக அளவில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் விற்பனையில் முன்னணியில் இருக்கும் 'எல்ஜி', 'சாம்சங்' உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் நுழைந்தன. அவர்கள் ஏற்கெனவே உலகளாவிய சந்தையில் பெற்ற வெற்றியின் மூலம் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு தங்களின் ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கினர்.

இதனால் மக்களின் பார்வை அந்த நிறுவனங்களின் பக்கம் சென்றது. கொஞ்சம், கொஞ்சமாகச் சந்தையில் இருந்து பின்னோக்கி நகர்ந்தது, 'வீடியோகான்'. மேலும் நிதி நெருக்கடியையும் சந்தித்தது. பிறகு, 'வீடியோகான்' நிறுவனத்தைத் திவாலானதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது வங்கிகளுக்கு நிறுவனம் பெரும் தொகை பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

சிபிஐ

கொள்கைகளை மீறி கடன்:

இதையடுத்து 'வீடியோகான்'யை யாரும் வாங்க முன்வரவில்லை. இதற்கிடையில் கடன் மோசடியில் சிக்கினார் வேணுகோபால் தூத். இறுதியாக சிபிஐ-யால் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். அதாவது ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாகச் சந்தா கோச்சார் பதவி வகித்தபோது வங்கி ஒழுங்குமுறை விதி, ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை மீறி வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் இதற்குப் பிரதிபலனாகச் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நியூபவர் ரீனிவபிள்ஸ் நிறுவனத்தில் வேணுகோபால் தூத் ரூ.64 கோடியை முதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தொகையானது வீடியோகான் குழுமத்துக்கு ஐசிஐசிஐ வங்கி கடன் வழங்கிய 2010 மற்றும் 2012-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பகுதி பகுதியாக செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கி

இந்த மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் அதன் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை கைது செய்தது. மும்பை நீதிமன்றத்தின் முன்பு, அவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், தற்போது இந்த வழக்கில் 3 வது முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வீடியோகான் குழும அதிபர் வேணுகோபால் தூத்தையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...