தைவானை உரிமைகோரும் சீனா, அந்த நாட்டைத் தங்களுடன் இணைய வலியுறுத்திவருகிறது. ஆனால், அதற்கு தைவான் மறுப்பு தெரிவிப்பதுடன், தங்கள் தீவு நாடு சுதந்திரமானது எனக் கூறி சீனாவை எதிர்த்துவருகிறது. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக தைவான் பாதுகாப்பு எல்லைக்குள் சீனா தொடர்ந்து போர் விமானங்கள், போர்க் கப்பல்களை அனுப்பி அந்த நாட்டை அச்சுறுத்திவருகிறது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், சீனாவின் 70-க்கும் மேற்பட்ட டிரோன்கள், போர் விமானங்கள் தைவான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் நுழைந்திருக்கின்றன. அவற்றில் 43 தைவான் ஜலசந்தின் இடைநிலைக்கோட்டை கடந்துவிட்டதாக தைவான் தெரிவித்திருக்கிறது. அத்துடன், சீனா வான் பாதுகாப்பு வளையத்துக்குள் மிகப்பெரிய ஊடுருவலை தொடங்கியிருப்பதாக தைவான் அரசு குற்றம்சாட்டியிருக்கிறது.தைவான் Vs சீனா
மேலும் தைவானுக்கு மிக அருகே ஏழு சீன கடற்படைக் கப்பல்கள் இருப்பதாகவும், சீன விமானங்களின் ஊடுருவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தைவான் கூறும் இந்த இடைநிலைக்கோடு இரு தரப்பினருக்கும் இடையே உள்ள அதிகாரபூர்வமற்ற எல்லைப் பகுதி. ஆனால் இதை சீனா அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தைவான் விவகாரம்: ``போருக்குத் தயாராகுங்கள்...'' - சீன ராணுவத்துக்கு ஜி ஜின்பிங் போட்ட உத்தரவு!
http://dlvr.it/SfzxgM
http://dlvr.it/SfzxgM
Comments
Post a Comment