Skip to main content

Posts

'கலர் டிவி விற்பனை டு ஐசிஐசிஐ வங்கி மோசடி வரை' - வீடியோகான் வேணுகோபால் தூத் கைதின் பின்னணி என்ன?!

மக்களின் கலர் டிவி மோகம்: மகாராஷ்டிரா மாநிலம் அஹமத் நகரில் பிறந்தவர் வேணுகோபால் தூத். முன்னதாக அவருடைய தந்தை நந்த்லால் மாதவ்லால் தூத், 'வீடியோகான்' குழுமத்தைத் தொடங்கியிருந்தார். பின்நாளில் தனது தந்தையின் குழுமத்தை விரிவுபடுத்தி, மாபெரும் தொழிலதிபராக மாற வேண்டும் என்ற ஆசை வேணுகோபால் தூத்தை தொற்றிக்கொண்டது. அந்த நேரத்தில்தான் 'தூர்தர்ஷன்'னும் தன் தொலைக்காட்சி சேவைகளைக் கறுப்பு - வெள்ளையில் இருந்து வண்ணத்துக்கு மாறிக்கொண்டிருந்தது. மக்களும் ஆர்வமாக கலர் தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கி பயன்படுத்தத் தொடங்கினார்கள். எனவே இந்த துறையில் கால் பதிப்பதன் மூலம் மாபெரும் வெற்றியைப் பெறலாம் எனத் திட்டமிட்டார், தூத். வேணுகோபால் தூத் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: மேலும் இதற்காக ஜப்பானுக்குச் சென்று பிரத்தியேகமாகப் படித்தார். தனியாகத் தொலைக்காட்சி பெட்டிகளைத் தயாரிக்க முடியாது என்பதால், அந்த துறையில் கோலோச்சி வரும் ஜப்பான் நாட்டை சேர்ந்த 'தோஷிபா' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இறுதியாக 1986-ம் ஆண்டு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பில் 'வீடியோகான்' ...

`பாஜக எண்ணங்களை நிறைவேற்றுகிறதா திமுக அரசு?' - சீமான் குற்றச்சாட்டு... ஒரு பார்வை!

வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே கூட்டணியில் இருந்துவரும் நிலையில், இப்படியொரு கருத்தை சி.வி.சண்முகம் கூறியதற்கு, பா.ஜ.க-விலிருந்தே கண்டனம் எழுந்தது. பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு மறுத்தார். சி.வி.சண்முகம் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அதே கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், `வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும்’ என்று அவர் கூறியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியை பா.ஜ.க-வின் ‘பி டீம்’ என்று தி.மு.க-வினர் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்கள். ‘என் அளவுக்கு பா.ஜ.க-வை யாரும் விமர்சிப்பதில்லை’ என்று கூறி, தி.மு.க-வினரின் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துவரும் சீமான் , ‘பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று தற்போது கூறியிருக்கிறார். இப்போது மட்டுமல்ல, இந...

Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா ஹேர் சீரம்ஸ்?

Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கான சீரம்கள் இப்போது விற்பனையாகின்றன. அவற்றில் மினாக்ஸிடில் என்பதைச் சேர்க்கிறார்கள். அதுதான் கூந்தலை வளரச் செய்யும் என்கிறார்களே... அது உண்மையா? அதை உபயோகிப்பதை நிறுத்திவிட்டால் முன்பைவிட கூந்தல் அதிகமாக உதிரும் என்றும் சொல்கிறார்களே... கூந்தல் வளர்ச்சிக்கு சீரம் அவசியமா? அதை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன் மருத்துவர் செல்வி ராஜேந்திரன் | சென்னை Doctor Vikatan: சருமத்துக்கும் கூந்தலுக்கும் தினமும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது சரியா? சீரம் பயன்படுத்தினால் கூந்தல் வளரும் என்ற முடிவுக்கு வருவதற்கு முன், கூந்தல் உதிர்வுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பரம்பரைத் தன்மை, ஆண்களுக்கோ, பெண்களுக்கோ ஏற்படக்கூடிய வழுக்கைப் பிரச்னை, தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகள், பிரசவத்துக்குப் பிறகான காலகட்டம், மெனோபாஸ், ஸ்ட்ரெஸ், அதீத காய்ச்சல், அறுவை சிகிச்சை, அதிக ரத்த இழப்பு, கீமோதெரபி, கருத்தடை மாத்திரை பயன்பாடு, சிலவகை மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் என முடி உதிர்வுக்குப் ப...

Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா ஹேர் சீரம்ஸ்?

Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கான சீரம்கள் இப்போது விற்பனையாகின்றன. அவற்றில் மினாக்ஸிடில் என்பதைச் சேர்க்கிறார்கள். அதுதான் கூந்தலை வளரச் செய்யும் என்கிறார்களே... அது உண்மையா? அதை உபயோகிப்பதை நிறுத்திவிட்டால் முன்பைவிட கூந்தல் அதிகமாக உதிரும் என்றும் சொல்கிறார்களே... கூந்தல் வளர்ச்சிக்கு சீரம் அவசியமா? அதை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன் மருத்துவர் செல்வி ராஜேந்திரன் | சென்னை Doctor Vikatan: சருமத்துக்கும் கூந்தலுக்கும் தினமும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது சரியா? சீரம் பயன்படுத்தினால் கூந்தல் வளரும் என்ற முடிவுக்கு வருவதற்கு முன், கூந்தல் உதிர்வுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பரம்பரைத் தன்மை, ஆண்களுக்கோ, பெண்களுக்கோ ஏற்படக்கூடிய வழுக்கைப் பிரச்னை, தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகள், பிரசவத்துக்குப் பிறகான காலகட்டம், மெனோபாஸ், ஸ்ட்ரெஸ், அதீத காய்ச்சல், அறுவை சிகிச்சை, அதிக ரத்த இழப்பு, கீமோதெரபி, கருத்தடை மாத்திரை பயன்பாடு, சிலவகை மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் என முடி உதிர்வுக்குப் ப...

தைவானை சுற்றிவளைக்கத் தயாராகும் சீனா... போர் அபாயம் எழுகிறதா?!

தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அதற்குப் பின்னால், சீனா போர் விமானங்களை அனுப்பியதால், தற்போது அங்கு போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. தங்களை அச்சுறுத்திவருவதாக சீனா மீது தைவான் குற்றம்சாட்டியிருக்கிறது. நான்சி பெலோசி 1927-ம் ஆண்டு முதல் 1949 வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதன்பிறகு, பல தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய தைவான், தனிநாடாக உருவெடுத்தது. அந்த நாட்டை சீனா அங்கீகரிக்க மறுக்கிறது. இப்போதும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதிதான் என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், தைவானுடன் மற்ற நாடுகள் நட்பு பாராட்டுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. உலக அரசியலில் இரு துருவங்களாக அமெரிக்காவும் சீனாவும் இருந்துவரும் நிலையில், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துவருகிறது. சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி, தைவானுடனான நட்புறவை அமெரிக்கா தொடர்ந்துவருகிறது. மேலும், சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்க...

``ராகுல் காந்தி ராமரை போன்றவர்..." - சல்மான் குர்ஷித் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நுழைந்தது. பாரத் ஜோடோ யாத்திரையில், கட்சிக்கு அப்பால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். இந்த நிலையில், ராகுல் காந்தி, நேற்று காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். ராகுல் காந்தி தற்போது டெல்லியில் கடும் குளிர் நிலவிவரும் சூழலில் வெறும் டி- ஷர்ட் மட்டும் அணிந்து நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் உத்தரப்பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "ராகுல் காந்தி மனிதாபிமானமுடையவர். அசாதாரணமானவர். எல்லோரும் டெல்லியின் குளிரில் உறைந்து ஜாக்கெட் அணிந்து கொண்டிருக்கும் போது, அவர் டி-ஷர்ட்களில் யாத்திரைக்காக வெளியே செல்கிறார். அவர...

24 மணி நேரத்தில் ஊடுருவிய 70-க்கும் மேற்பட்ட சீனப் போர் விமானங்கள்! - தைவான் எல்லையில் பதற்றம்

தைவானை உரிமைகோரும் சீனா, அந்த நாட்டைத் தங்களுடன் இணைய வலியுறுத்திவருகிறது. ஆனால், அதற்கு தைவான் மறுப்பு தெரிவிப்பதுடன், தங்கள் தீவு நாடு சுதந்திரமானது எனக் கூறி சீனாவை எதிர்த்துவருகிறது. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக தைவான் பாதுகாப்பு எல்லைக்குள் சீனா தொடர்ந்து போர் விமானங்கள், போர்க் கப்பல்களை அனுப்பி அந்த நாட்டை அச்சுறுத்திவருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், சீனாவின் 70-க்கும் மேற்பட்ட டிரோன்கள், போர் விமானங்கள் தைவான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் நுழைந்திருக்கின்றன. அவற்றில் 43 தைவான் ஜலசந்தின் இடைநிலைக்கோட்டை கடந்துவிட்டதாக தைவான் தெரிவித்திருக்கிறது. அத்துடன், சீனா வான் பாதுகாப்பு வளையத்துக்குள் மிகப்பெரிய ஊடுருவலை தொடங்கியிருப்பதாக தைவான் அரசு குற்றம்சாட்டியிருக்கிறது.தைவான் Vs சீனா மேலும் தைவானுக்கு மிக அருகே ஏழு சீன கடற்படைக் கப்பல்கள் இருப்பதாகவும், சீன விமானங்களின் ஊடுருவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தைவான் கூறும் இந்த இடைநிலைக்கோடு இரு தரப்பினருக்கும் இடையே உள்ள அதிகாரபூர்வமற்...