Skip to main content

Doctor Vikatan: தூங்கும் இடம் மாறினால் கனவுகள் அதிகரிக்குமா, தூக்கம் பாதிக்குமா?

Doctor Vikatan: புதிய இடத்திலோ, புதிய அறையிலோ தூங்கும்போது பொதுவாக தூக்கம் பாதிக்கப்படுமா... அப்படி இடம் மாறும்போது கனவுகளும் அதிகம் வருவது போல உணர்கிறேன். இது எனக்கு மட்டும் தோன்றும் உணர்வா... அப்படி நடப்பது இயல்பானதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ரோஹித் கண்ணா.

மனநல மருத்துவர் ரோஹித் கன்னா
மனநல மருத்துவர் ரோஹித் கன்னா

ஒரு நபர் ஹோட்டல் அல்லது உறவினரின் வீடு போன்ற ஒரு புதிய சூழலில் தூங்கும்போது, மூளை சற்று அதிக விழிப்புடன் இருக்கும். இது லேசான தூக்கத்துக்கு வழிவகுக்கும். இதனால் அடுத்த நாள் காலையில் கனவுகளை நினைவுகூர்வது எளிதாகிறது. இதைவைத்து  நீங்கள் அதிகமாக கனவு காண்கிறீர்கள் என்று அர்த்தபடுத்திக்கொள்ள முடியாது.

மல்லாாந்து படுத்துத் தூங்குவது கனவுகளை நன்கு நினைவில் வைத்திருப்பதுடன் தொடர்புடையது என்று  சில ஆய்வுகளும்,  அப்படித் தூங்குவது அதிக கெட்ட கனவுகளுடன் (nightmares) தொடர்புடையது எனச் சில ஆய்வுகளும் சொல்கின்றன.

மல்லாந்து படுத்த நிலை காற்றுப்பாதையைச் சற்று சுருக்கி, குறட்டை அல்லது மூச்சுத்திணறல் (sleep apnea) ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். தூக்கத்தின்போது ஆக்ஸிஜன் குறையும் போது, மூளை அந்த மன அழுத்த சமிக்ஞையைச் செயலாக்கி, அதை ஒரு பயமுறுத்தும் கனவாக மாற்றும்.

ஒருபக்கமாகச் சாய்ந்து தூங்குவது பொதுவாக காற்றுப்பாதையைத் தெளிவாக வைத்திருக்கும். குறட்டை மற்றும் தூக்கத்தின் போதான மூச்சுத்திணறல் அபாயத்தைக் குறைக்கிறது, அதனால்தான் அமைதியான, அதிக நிம்மதியான தூக்கத்திற்கு ஒருக்களித்த நிலையே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், ஆழ்ந்த உறக்கத்துக்கு இதுதான் சிறந்த பொசிஷன் என்று எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. 

கனவுகள்
கனவுகள் என்பவை உங்கள் மூளை செய்ய வேண்டியதைச் செய்கிறது என்பதற்கான அறிகுறியே.

கனவுகள் என்பவை உங்கள் மூளை செய்ய வேண்டியதைச் செய்கிறது என்பதற்கான அறிகுறிகளே. கனவு காண்பதைப் பற்றிக் கவலைப்படுவதற்குப் பதிலாக, ஆரோக்கியமான தூக்கப் பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்துங்கள். பயமுறுத்தும் கனவுகள் தொடர்ந்து வந்தாலோ, தூக்கத்தின்போது சுவாசக் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது தூக்கமின்மை வாரக்கணக்கில் நீடித்தாலோ, அதைப் புறக்கணிக்காதீர்கள்.

மனநல மருத்துவர் அல்லது தூக்கவியல் நிபுணரை (sleep specialist) கலந்தாலோசிப்பது நல்லது. பெரும்பாலான தூக்கக் கோளாறுகளுக்குச் சிகிச்சையின் மூலம் நல்ல தீர்வு காண முடியும்.

டாக்டர்  ரோஹித் கன்னா:சென்னையைச் சேர்ந்த Schizophrenia Research Foundation (SCARF) India அமைப்பில் மனநல மருத்துவராகப் பணிபுரிகிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...