Doctor Vikatan: பொதுவாகவே ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்றும் பருமனானவர்களுக்கு அது அதிகமிருக்கும் என்றும் கேள்விப்படுகிறோம். ஆனால், அது தவறான கருத்து என்று சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். உண்மையா? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன். கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் ஒல்லியான நபர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது, பருமனானவர்களுக்கு தான் அது அதிகமிருக்கும் என்ற அறியாமை படித்தவர்களுக்கே கூட இருப்பதைப் பார்க்கிறோம். ஒருவரது உடல் அமைப்புக்கும் அவரது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுக்கும் சம்பந்தமே இல்லை. கொழுப்பில் பலவிதங்கள் உள்ளன. நம் சருமத்துக்குக் கீழே, அதாவது கழுத்து, இடுப்பு, மார்பு என உடல் முழுவதும் சருமத்துக்குக் கீழே உள்ள கொழுப்புக்கு 'சப்கியூட்டேனியஸ் ஃபேட்' ( subcutaneous fat ) என்று பெயர். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதுதான் ஒருவருக்கு உடல் பருமன் ஏற்படக் காரணமாகிறது. இந்தக் கொழுப்புத் திசுக்களுக்கும், கொலஸ்ட்ரால் எனப்படுகிற கொழுப்புச்சத்துக்கும் சம்ப...