Skip to main content

சைனஸ் எப்போது ஆஸ்துமாவாக மாறலாம்? நிபுணர் விளக்கம்!

நவம்பர் மாதத்தில் இருந்தே குளிர்காலம் ஆரம்பித்துவிடும். இந்த காலகட்டத்தில்தான் சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு அது அதிகரிக்கும். இதற்கு லைஃப் ஸ்டைல் தீர்வுகள் என்னென்ன என்று சொல்கிறார் செங்கல்பட்டைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ந. கிருபானந்த்.

சைனஸ், தப்பிக்க என்ன வழி?
சைனஸ், தப்பிக்க என்ன வழி?

''மூளையின் எடையை பேலன்ஸ் செய்ய, தகவமைப்பாக முகத்தில் காற்று அறைகள் இருக்கின்றன. இவை, சைனஸ் அறைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சைனஸ் காற்றறைகள் ஒவ்வாமையினால் தொற்றுக்கு உள்ளாகும்போது அழற்சிஅடைவதுதான் 'சைனஸைடிஸ்’ நோயாக அறியப்படுகிறது.

சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தனிப்பட்ட மனித உடல் இயல்பினாலோ உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒரு வகை நீரை சுரக்க ஆரம்பிக்கின்றன.

எதிர்ப்புச் சக்தி குறைவால் நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். உப உபத்திரவமாக தும்மல், தலைவலி, தலைபாரம் போன்றவையும் தோன்றும். இந்த நிலை வரை எழும் தொந்தரவுகள் சைனஸைடிஸ் வரையறைக்குட்பட்டவை. இதே தொந்தரவுகள் தொடர்ந்து நீடிக்கும்போது, அது ஆஸ்துமாவாக உருவாகலாம்.

சைனஸ், தப்பிக்க என்ன வழி?
சைனஸ், தப்பிக்க என்ன வழி?

உடலின் ஒவ்வாமைக்கு தனிப்பட்ட மற்றும் பொதுவான காரணிகள் ஏராளமாக இருக்கின்றன. ஒருவருக்குக் குறிப்பிட்ட பதார்த்தம் ஒவ்வாமையைத் தரலாம். மேற்படி உணவைத் தவிர்ப்பதன் மூலம் அவர் நிவாரணம் பெற முடியும்.

ஆனால், மழை, பனி போன்ற சீதோஷ்ண மாறுதல்கள் ஒருவரின் ஒவ்வாமை இயல்பை அதிகரிக்கும்போது சமாளிப்பது சற்று சிரமம்தான்.

உதாரணமாக, காற்றில் பரவும் மாசுகளை மழையும் பனியும் ஈர்த்து, நம் சுவாசப்பரப்பிலேயே நிலைநிறுத்துகின்றன. கூடவே, இந்தக் காலங்களில் பூச்செடி, மரங்கள் என்று அதிகரிக்கும் மகரந்தச் சேர்க்கையும் சைனஸைத் தூண்டும். இந்தப் பொதுக் காரணங்களை தவிர்க்க முடியாது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஓரளவு பாதுகாப்பு பெறலாம்.

சைனஸைடிஸை எதிர்கொள்ள மருத்துவ சிகிச்சைகளை விட, லைஃப் ஸ்டைல் ஒழுங்குகளே நல்ல ரிசல்ட் தரும். தூய பருத்தி ஆடைகள், கம்பளி ஆடையெனில் அவை தூசு இல்லாதிருப்பது, பூக்கள், தூசுக்கள் சூழலைத் தவிர்ப்பது, மாஸ்க் அல்லது கர்ச்சீஃப் உபயோகிப்பது என ஆயத்தமாக இருக்கலாம்.

பனி, மழை காலங்களில் பாக்டீரியா தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளதால் உடல் எதிர்ப்பு சக்தி சீர்குலையாதிருக்க ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

சைனஸ் அறைகளின் ஆரம்பகால பாதிப்புக்கு சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகள் போதுமானது. இறுகியும், மஞ்சள் நிறத்திலும் சளி இருக்குமானால் மருத்துவ ஆலோசனையுடன் கூடுதல் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தற்போது மாத்திரை வடிவில் கிடைக்கும் மருந்துகளை கொண்டு 'வேது’ (நீராவி) பிடிப்பது பக்க விளைவுகளற்ற சிறப்பான வழி. நாள்பட்ட சைனஸ் பாதிப்பு, காற்றறை சுவரை தடிப்பாக்கி, அதன் வாயை அடைக்க முற்படும். இதற்கு எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் பெறலாம்.

போதிய கவனிப்பு, சிகிச்சைகளின்றி சைனஸ் பிரச்னை ஆஸ்துமாவாக உருவெடுக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் இருக்கட்டும்'' என்கிறார் டாக்டர் ந. கிருபானந்த்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...