Skip to main content

Doctor Vikatan: உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்குமா?

Doctor Vikatan: காரணமே இல்லாமல், சிலருக்கு பிபி அதிகரிப்பது ஏன்? உணவில் உப்பைக் குறைத்தும் பிபி அதிகரிப்பது ஏன், பிபி அதிகமாக உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக்  ரிஸ்க் அதிகம் என்பது உண்மையா, பிபி மானிட்டர் மெஷின் வைத்து தினமும் டெஸ்ட் செய்ய வேண்டுமா, மாத்திரைகள் எத்தனை நாள்களுக்கு எடுக்க வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்.

இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்
இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension) என்று சொல்லக்கூடிய,  ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடிய பாதிப்பு இருக்கிறது. குடும்ப வரலாறு, வயதாவது, உடல் பருமன், மன அழுத்தம், புகைப்பழக்கம், தூக்கமின்மை போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம்.

உணவில் உப்பைக் குறைத்தாலும், மன அழுத்தம் இருந்தாலோ, புகைப்பழக்கம் தொடர்ந்தாலோ, BP நிச்சயம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். தவிர, அவர்களுக்கு ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தமானது பல காலம் தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்களும், கண்களும்கூட பாதிக்கப்படலாம். எனவே, இதயம், மூளை, கண்கள், சிறுநீரகங்கள் என எல்லாமே ஆரோக்கியமாக இருக்க ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம். 

பிபி பரிசோதிக்கும் மானிட்டரை வீட்டில் வைத்தும் அவ்வப்போது டெஸ்ட் செய்து பார்க்கலாம்.

ரத்த அழுத்தமானது 120/80-க்குள் இருக்க வேண்டும். 121 முதல் 135 வரை (121/89 - 135/89) அதிகரிக்கும்போது உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி, ரத்த அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யலாம்.

140/90- என்பதைத் தொட்டுவிட்டால் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றைப் பின்பற்றினால், ஒரு கட்டத்தில் மாத்திரைகளை நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது. BP அளவை மருத்துவரிடம் செக் செய்து கொள்வதே சிறந்தது. 

அது தவிர்த்து பிபி பரிசோதிக்கும் மானிட்டரை வீட்டில் வைத்தும் அவ்வப்போது டெஸ்ட் செய்து  பார்க்கலாம். ஏனென்றால், மருத்துவமனைக்கு வருவதால் பிபி அதிகரிக்கும் மக்கள் பலர். அதற்கு 'வொயிட் கோட் ஹைப்பர்டென்ஷன்' (White coat hypertension) என்றே பெயர்.

அதேபோல, ' ஆம்புலேட்டரி பிபி மானிட்டரிங்' (Ambulatory blood pressure monitoring)  என்றொரு கருவியும் உண்டு. வருடம் ஒருமுறை இதிலும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். இரவில் பொதுவாக பிபி அளவு குறைய வேண்டும்.

அப்படிக் குறையாவிட்டால் அதை 'நாக்டர்னல் ஹைப்பர் டென்ஷன்' (Nocturnal hypertension) என்று சொல்வோம். இதை ஹோம் பிபி மானிட்டர் வைத்துக் கண்டுபிடிக்க முடியாது.

BP checking

உணவில் அதிக உப்பும் கொழுப்பும் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக காபி, டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 2 கப்புக்கு மேல் போக வேண்டாம்.  நீரிழிவு கட்டுக்குள் இருக்க வேண்டும்.

80 முதல் 90 சதவிகித மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் அவசியம். பலருக்கும் அறிகுறிகள் இருப்பதில்லை என்பதால், பிரச்னை இல்லை என மருந்துகளை நிறுத்தக்கூடாது.  10 முதல் 15 சதவிகித மக்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

மற்றவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வே இருப்பதில்லை. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், உடலின் மற்ற உறுப்புகள் பாதிப்படைவதையும் உயிரிழப்பையும் பெருமளவில் தடுக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...