Skip to main content

Doctor Vikatan: பருக்களை விரட்டுமா பயத்த மாவும் கடலை மாவும்?

Doctor Vikatan:  எனக்கு வயது 23. நினைவு தெரிந்த நாள் முதல் முகத்துக்கு சோப் உபயோகிப்பதில்லை. பயத்த மாவு (பாசிப்பயறு மாவு) அல்லது கடலை மாவு மட்டும்தான் பயன்படுத்துவேன். சமீப நாள்களாக எனக்கு முகத்தில் அளவுக்கதிகமாக பருக்கள் வருகின்றன. எப்போதும் போல பயத்த மாவும் கடலை மாவும் உபயோகித்தாலே போதுமா, பருக்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் பூர்ணிமா

முதல் விஷயம், இத்தனை வருடங்களில இல்லாமல் உங்களுக்கு திடீரென பருக்கள் வர என்ன காரணம் என்பதை முதலில் பாருங்கள். 

ஆரோககியமான வாழ்க்கைமுறைக்கு அடிப்படை சரியான உணவுப்பழக்கம். அதிக மாவுச்சத்தும் இனிப்பும் பதப்படுத்திய உணவுகளும் பால் பொருள்களும் உள்ள உணவுப்பழக்கம் பருக்களைத் தூண்டும். 

பருக்களை ஏற்படுத்துபவை ஒருவகை பாக்டீரியா. சருமத்தில் அதிக எண்ணெய்ப்பசை சுரந்தால் அதை உண்பதற்காக பாக்டீரியா கிருமிகள் முன்வரும். எனவே, சருமத்தின் எண்ணெய்ப்பசையைக் கட்டுப்படுத்துகிற மாதிரியான மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஃபேஸ்வாஷ் போன்ற புற சிகிச்சைகளை நாடலாம்.

இவற்றில் உங்களுக்கு எது சரி என்பதை உங்கள் பருக்களின் தீவிரத்தைப் பார்த்த பிறகுதான் மருத்துவரால் முடிவு செய்ய முடியும்.

ஆரம்பநிலை என்றால் புறப்பூச்சுகளின் மூலமே சமாளிக்கப் பார்க்கலாம்.  அதுவே, பருக்கள் கட்டிகள் போல உருமாறி, உள்ளே சீழுடன் வலி நிறைந்ததாக இருந்தால்  உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகளின் மூலம்தான் குணப்படுத்த முடியும். 

ஃபேஸ்வாஷ்
பருக்கள் கட்டிகள் போல உருமாறி, உள்ளே சீழுடன் வலி நிறைந்ததாக இருந்தால் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகளின் மூலம்தான் குணப்படுத்த முடியும்.

தினசரி 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்களின் செயல்பாட்டை சரியாக வைத்துக்கொள்ளலாம். பருக்கள் வராமல் தடுக்க முறையான சருமப் பராமரிப்பும் முக்கியம். சாலிசிலிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட், நியாசினமைடு போன்றவை உள்ள ஃபேஸ்வாஷ், க்ரீம்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டும்.

வீட்டு வைத்தியங்களின் மூலம் பருக்களை குணப்படுத்துவது சிரமம். அப்படிப்பட்ட குறிப்புகளைப் பின்பற்றினால் இருக்கும் பருக்கள் மேலும் பெரிதாகி, சீழ்க்கட்டிகளாகி, பிறகு தழும்புகளும் நிரந்தரமாகிவிடும். எனவே, முதலில் சரும மருத்துவரை சந்தித்து உங்கள் பருக்களின் தீவிரத்துக்கேற்ப அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளைப் பின்பற்றுங்கள்.

உணவுப்பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் முறைப்படுத்துங்கள். நேரத்துக்குச் சாப்பிடுங்கள்.  பயத்த மாவும் கடலை மாவும் பருக்கள் போக உதவாது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...