Skip to main content

Health: கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை; செலவில்லா அழகுக்குறிப்புகள்!

கேரட்... கரோட்டின் மற்றும் விட்டமின் `ஏ' சத்து நிறைந்தது. விட்டமின் `ஏ', கண்களுக்கு மிகவும் நல்லது என்பதுடன், உடல் திசுக்களுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியது.

கரோட்டின் சத்து தொடர்ந்து கிடைக்கப்பெற்றால், சருமம் பளிச்சென்று ஆகும். கேரட் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை
கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை

ஒரு கப் கேரட் துருவலுடன் 4 வெள்ளரித் துண்டுகள் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை வடிகட்டினால் `வழவழ' க்ரீம் போல வரும். அதை கண்களைச் சுற்றி அப்ளை செய்வதோடு, ஒரு துணியில் தோய்த்து கண்களுக்கு மேற்புறமும் வைத்துக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து துணியை எடுத்துவிட்டு, க்ரீமை கழுவாமல் அப்படியே விட்டுவிடவும். இது கண்களை `பளிச்' என்று ஆக்கும், கூரிய பார்வை கிடைக்கச் செய்யும். இதை முகம், கைகளுக்கு மாய்ஸ்ச்சரைசர் ஆகவும் பயன்படுத்தலாம்.

வெயிலில் வேலை செய்வோர் மற்றும் லேப்டாப், கணினியில் வேலை செய்வோருக்கு அந்த வெப்பம் காரணமாக முகம் சிறிது மங்கிக் காணப்படும். அரைத்த கேரட் ஒன்றுடன் ஒரு டீஸ்பூன் பால், சிறிது கடலை மாவு சேர்த்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர, மங்கிய முகம் தன் இயல்பை மீட்கும்.

கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை
கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை

கேரட்டை பாலில் வேக வைத்து அரைக்க, க்ரீம் போல கிடைக்கும். இதை தினமும் வெளியே செல்லும்போது மாய்ஸ்ச்சரைசராக முகம், காது, கழுத்துப் பகுதியில் பயன்படுத்தலாம். இதனால் வறண்ட சருமம் ஈரப்பதம் பெறும். காது, கழுத்து பகுதிகளில் உள்ள கருமை நீங்குவதோடு... புருவம் அரிப்பதும், புருவத்தில் முடி உதிர்வதும் தடுக்கப்படும்.

அரை கப் கேரட் சாற்றுடன் சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து முகத்தில் `பேக்' போட்டு அரை மணி நேரம் கழித்து உரித்தெடுக்கவும். இதை தொடர்ந்து செய்து வர, கரும்புள்ளிகளுக்கு `பை பை' சொல்லலாம்.

கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை
கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை

பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பின் வயிற்றில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வந்துவிடும். குழந்தைப் பராமரிப்பு பொறுப்புகளுக்கு இடையே அதை நீக்கும் வழிமுறைகளைச் செய்யத் தவறிவிட்டால், அது நிரந்தரமாகத் தங்கிவிடும். அதைத் தவிர்க்க, 5 துண்டுகள் கேரட்டுடன் 5 பாதாம் சேர்த்து அரைத்து, தழும்புகளில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்கவும். இதை தினசரி செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

டைஃபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு, கன்னங்கள் வெளிறிப்போயிருக்கும். அதைச் சரிசெய்ய, ஒரு கேரட், 2 பேரீச்சம்பழத்துடன் சிறிது பால் சேர்த்து அரைக்கவும். இதை கன்னங்களுக்கு பேக் போட்டு கழுவி வர, இழந்த பொலிவு மீண்டும் கிடைக்கும்.

கேரட் சாறு - அரை கப், கஸ்தூரி மஞ்சள் - ஒரு டீஸ்பூன், பார்லி பொடி - 2 டீஸ்பூன்... இவை அனைத்தையும் கலந்து வாரம் ஒருமுறை சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தி குளித்துவர, மாசு, தூசால் சருமத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.’’


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...