Doctor Vikatan: எல்லோருக்கும் இன்று ஸ்ட்ரெஸ் இருக்கிறது. ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லை என்ற நிலையில்தான் பலரும் இருக்கிறோம். இந்நிலையில் முடி உதிர்வுக்கு ஸ்ட்ரெஸ்ஸை காரணமாகச் சொல்வது எந்த அளவுக்கு உண்மை... இரண்டுக்கும் தொடர்பு உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம் கேச பராமரிப்பு மருத்துவர் தலத் சலீம் 'ஏன் முடி உதிருது...' என்ற கேள்விக்கு 'கவலை... அதான்' என்றாராம் ஒருவர். 'அப்படி என்ன கவலை...' என்று கேட்டதற்கு, 'முடி உதிருதேன்னுதான்...' என்றாராம் பதிலுக்கு. முடி உதிர்வு பற்றிய பிரபலமான ஜோக் இது. நகைச்சுவையாகத் தெரிந்தாலும் இது உண்மையும்கூட. முடி உதிர்வுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் முதலிடம் மன அழுத்தம் எனப்படும் ஸ்ட்ரெஸ்ஸுக்கு. மன அழுத்தம் அதிகமாவதன் விளைவால் ஏற்படுகிற முடி உதிர்வுப் பிரச்னையை 'அலோபேஷியா அரியேட்டா', 'டெலோஜன் எஃப்ளுவியம்' மற்றும் 'ட்ரைக்கோ டில்லோமேனியா' என மூன்றாக வகைப்படுத்தலாம். முதல் வகையான 'அலோபேஷியா அர...