Skip to main content

பூனைக்கடி ரேபிஸ் நோயாக மாறிய கொடுமை; வேதனையில் இளைஞர் விபரீத முடிவு.. மருத்துவமனையில் சோகம்

பூனை கடித்ததால் பாதிக்கப்பட்ட இளைஞர், அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன் - விஜயலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் பாலமுருகன். கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடியில் பாலமுருகன் உறங்கிகொண்டிருந்தபோது இரண்டுபூனைகள் சண்டையிட்டபடி மேலே விழுந்துள்ளது. அப்போது பூனை ஒன்று பாலமுருகனின் தொடையில் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளது.

பூனை

உடனே மருத்துவமனைக்கு சென்ற பாலமுருகன் சாதாரண காயத்துக்கான ஊசி மருந்தை எடுத்துக்கொண்டு பணிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், பாலமுருகனுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். கடந்த வாரம், அடிக்கடி தலைவலிப்பதாக பாலமுருகன் கூறியுள்ளார். குடிக்கும் தண்ணீரை பார்த்தும், காற்று வீசும்போதும் பயந்து நடுங்கியுள்ளார்.

இதனையடுத்து அவரை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரேபி்ஸ் அறிகுறி இருப்பதாக கூறி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

இதனையடுத்து நேற்றிரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாலமுருகனை சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரேபிஸ் நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அப்போது பாலமுருகன் அந்த அறையில் கூச்சலிட்டவர், அங்கிருந்து வெளியேற முயன்றவரை தடுத்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இரவு முழுவதும் காயத்தால் ஏற்பட்ட வலியாலும் மன உளைச்சலாலும் புலம்பியபடி அங்கும் இங்கும் ஓடியபடி இருந்த பாலமுருகன் அதிகாலையில் அறையில் இருந்த போர்வையால் கழுத்தை இறுக்கி கட்டி, மறுமுனையை கதவில் கட்டி தொங்கியபடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பாலமுருகன்

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்களும், பணியாளர்களும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

பூனை கடித்ததை அலட்சியமாக விட்டதால் 26 வயதான பாலமுருகன் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பூனைக்கடி தொடர்பாக கால்நடைத்துறை மதுரை மண்டல இணை இயக்குநர் முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாயைப் போன்றே பூனைகளுக்கும் ரேபிஸ் தடுப்பூசிகள் போட வேண்டும், பூனை கடித்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

பூனைக்கடியை அலட்சிய படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பூனை கடிக்கும் இடத்தை பொறுத்து வேகமாக ரேபிஸ் நோய் பரவும் என்பதால் சிறிய அளவில் கடித்தாலும் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். பூனைக்களுக்கான தடுப்பு ஊசிகள் அரசு கால்நடை மருத்துவமனைகளில் கிடைக்கிறது" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...