Doctor Vikatan: பற்களில் உள்ள கறையைப் போக்க, உப்பு கொண்டு பல் துலக்கலாமா... டூத்பேஸ்ட்டிலும் உப்பு இருப்பதாகத் தானே விளம்பரப்படுத்துகிறார்கள்... பற்களின் மஞ்சள் கறையைப் போக்க என்ன தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக் பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக் | சென்னை Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தேவையா? பற்களின் இடுக்குகளில், ஈறுகளுக்கும் பற்களுக்கும் பின்னால் உள்ள பகுதிகளில் வெளிர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் சேர்கிற படிமத்தை பற்காரை என்கிறோம். இதை ஆங்கிலத்தில் 'ப்ளாக்' ( Plaque ) என்று சொல்கிறோம். இது மிருதுவாக இருக்கும்போது ப்ளாக் எனப்படும். அதாவது ஒருநாள் பல் துலக்கவில்லை, அதனால் பற்களில் வெள்ளையாகவோ, மஞ்சளாகவோ ஒரு படிமம் படிகிறது என்றால் அது ப்ளாக் எனப்படும். அதுவே ஒரு வாரம், அதைத் தாண்டி பற்களைச் சுத்தப்படுத்தாததால் காரை சேர்ந்து நம் உமிழ்நீரில் உள்ள கால்சியம், தாதுக்கள் போன்றவையும் அத்துடன் சேர்ந்து அது கடினமாக, சிமென்ட் மாதிரி மாறும். அதற்கு 'கால்குலஸ்' (Calculu...