Doctor Vikatan: என் வயது 52. கடந்த ஒரு வருடமாக சர்க்கரைநோய்க்கு இன்சுலின் போட்டுக்கொண்டிருக்கிறேன். தினமும் ஊசி குத்திக்கொள்வது வலியைத் தருகிறது. தவிர, சில நாள்களில் மறந்துவிடுகிறேன். இந்நிலையில்தான் வாரம் ஒருமுறை போட்டுக்கொள்ளக்கூடிய இன்சுலின் குறித்து செய்தி படித்தேன். அது நம்மூருக்கும் வந்துவிட்டதா... அதை எல்லோரும் போட்டுக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். வாரத்திற்கு ஒரு முறை செலுத்திக்கொள்ளும் புதிய இன்சுலினான 'ஐகோடெக்' (Icodec), இந்தியாவில் கடந்த ஒரு மாதமாகப் பயன்பாட்டில் உள்ளது. பொதுவாக இன்சுலினைப் பொறுத்தவரை, மருத்துவர்கள் இரண்டு விதமாக வழங்குவோம். முதலாவது, உணவு சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் சர்க்கரை அளவைக் குறைப்பதற்கான இன்சுலின். இதை காலை, மதியம் மற்றும் இரவு உணவிற்கு முன்பாகப் போட்டுக்கொள்ளப் பரிந்துரைப்போம். இதன் பெயர் 'ப்ராண்டியல் இன்சுலின்' (Prandial Insulin) ஆகும். இரண்டாவது வகை 'பேசல் இன்சுலின்' (Basal Insulin). இது ...