Skip to main content

Doctor Vikatan: தோள்பட்டையிலிருந்து விரல்களுக்கு இறங்கும் வலி... எப்படிப்பட்ட சிகிச்சை தேவை?

Doctor Vikatan:  எனக்கு தோள்பட்டையில் வலி இருக்கிறது.  தவிர வலது கை மற்றும் விரல்களிலும் வலி இருக்கிறது. மொபைல்  பார்க்க முடியாத அளவுக்கு வலி இருக்கிறது.  இதற்கு எப்படிப்பட்ட சிகிச்சை எடுக்க வேண்டும்... பிசியோதெரபி தேவையா?

- மகேந்திரன், விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, எலும்பியல்  சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு.

எலும்பியல்  சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு
எலும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு

நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்பட்டுள்ளது 'செர்வைகல் ஸ்பாண்டிலோசிஸ்'  (Cervical Spondylosis) எனப்படும் கழுத்து எலும்பு தேய்மானம் பாதிப்பாக இருக்கலாம் என்று தெரிகிறது.

கழுத்திலுள்ள எலும்புகள் தேய்மானமடைந்து, அருகில் உள்ள நரம்புகளைத் தொடுவதால் அல்லது அழுத்துவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக கழுத்திலிருந்து கை வரை வலி பரவலாம் மற்றும் கைகளில் மரத்துப்போதல் (Numbness) ஏற்படலாம். 

இது வயது முதிர்வின் காரணமாக ஏற்படலாம். அதுமட்டுமன்றி, நாம் உட்காரும் முறை (Posture), உறங்கும்போது இரண்டு, மூன்று தலையணைகளை வைத்துக்கொள்வது மற்றும் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது போன்றவற்றாலும் இந்தப் பாதிப்பு வரக்கூடும்.

நீங்கள் முதலில் எலும்பு முறிவு மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும். ஆரம்பகட்டமாக எக்ஸ்ரே (X-ray) எடுத்துப் பார்த்துவிட்டு, பிசியோதெரபி (Physiotherapy) செய்ய வேண்டும்.

பிசியோதெரபியில் முன்னேற்றம் இல்லையெனில், எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் எடுக்க வேண்டியிருக்கும். நிலைமை தீவிரமாக இருந்தால், அடுத்தகட்டமாக முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை (Spinal Surgery) தேவைப்படலாம்.

படுத்துக்கொண்டே செல்போன் பார்ப்பது, டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இந்தப் பிரச்னையின் பாதிப்பிலிருந்து மீள சில விஷயங்களை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மொபைல் அல்லது கணினியைப் பயன்படுத்தும்போது தலையைக் குனியாமல், கண் மட்டத்திற்கு (Eye level) நேராக வைத்துப் பார்க்க வேண்டும். படுத்துக்கொண்டே செல்போன் பார்ப்பது, டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அதிக உயரமான தலையணைகளைத் தவிர்த்து, கழுத்தின் வளைவுக்கு ஏற்ற மெலிதான தலையணையைப் பயன்படுத்த வேண்டும்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள் 30-45 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிய இடைவேளை எடுத்து கழுத்து அசைவுப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். தலையிலோ அல்லது தோளிலோ அதிக எடையுள்ள பொருள்களைச் சுமப்பதைத் தவிர்க்க வேண்டும்.

டாக்டர் ரமேஷ்பாபு:

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்பாட் மருத்துவமனையின் இயக்குநர். எலும்பியல் மருத்துவத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...