Doctor Vikatan: என் நண்பனுக்கு 40 வயதாகிறது. அவனுக்கு எப்போதும், எந்த விஷயத்துக்கும் கோபமே வருவதில்லை. யாராவது அவனை அவமானப்படுத்தினாலோ, காயப்படுத்தினாலோகூட கோபப்பட மாட்டான். நியாயமான விஷயங்களுக்குக்கூட கோபப்படாத அவனை எப்படிப் புரிந்துகொள்வது... அவனுக்கு மனநல சிகிச்சை தேவையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது இயற்கையின் நியதி. இது மனவியலுக்கும் பொருந்தும். எந்த உயிரினமும் ஜடம்போல இருத்தல் ஆகாது. சூழலுக்கேற்ப ரியாக்ட் செய்ய வேண்டும். அதுதான் அது உயிருள்ள படைப்பு என்பதற்கான அடையாளமும்கூட. உங்கள் நண்பர் எதற்கும் கோபப்பட மாட்டார் என்று தெரிந்து, அவரின் எதிராளி அவரிடம் இன்னும் சற்று கோபமாகப் பேசலாம், கத்தலாம். யாரையும் தொந்தரவு செய்யாமல் இருக்கும் ஓர் உயிரினத்தை நாம் வேண்டுமென்றே சீண்டினால் அது நம்மைத் தாக்க முயலும். ஐந்தறிவு ஜீவன்களுக்கும் இருக்கக்கூடிய இயற்கையான, இயல்பான குணம் அது. பாக்டீரியாவோ, வைரஸோகூட சூழலுக்கேற்ப, தன் வாழ்வாதாரத்துக்காகத் தன்னை மாற...