Skip to main content

Doctor Vikatan: தூக்கத்தில் பற்களைக் கடிப்பது மனநல பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என் 15 வயது மகளுக்கு தூக்கத்தில் பற்களை நறநறவெனக் கடிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்படிப் பற்களைக் கடிப்பதற்கு மன அழுத்தம் காரணமாக இருக்குமா... இது மனநல பாதிப்பின் அறிகுறியா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் நித்யா பிரதீப்.

உளவியல் மருத்துவர் நித்யா பிரதீப்
உளவியல் மருத்துவர் நித்யா பிரதீப்

தூக்கத்தில் பற்களைக் கடிக்கும் பிரச்னைக்கு 'ப்ரக்ஸிசம்' (Bruxism) என்று பெயர். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தமும் அவற்றில் ஒன்று.  

பகல் நேரத்தில் வேலைகளில் பிஸியாக இருந்தாலும், இரவில் விழிப்புணர்வு இல்லாத (Subconscious) தூக்க நிலையில் மன அழுத்தம் காரணமாக பற்களைக் கடிக்கும் பழக்கம் ஏற்படலாம்.

பற்கள் அல்லது தாடை (Jaw) சார்ந்த பிரச்னைகள் இருப்பது,  தவறான தூக்க முறை அல்லது போதுமான அளவு தூக்கமின்மை (Poor Quality of Sleep), அதிகப்படியான புகைப்பழக்கம், மது அருந்துதல் மற்றும் அதிக அளவில் கஃபைன்  எடுத்துக்கொள்ளுதல் போன்றவையும் காரணங்களாக இருக்கலாம்.  

உடல் பருமன் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு  'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive Sleep Apnea)  எனப்படும் பிரச்னை ஏற்படலாம். அதன் காரணமாகவும் தூக்கத்தில் பற்களைக் கடிக்கலாம். மன அழுத்தத்திற்கான மருந்துகள் (Anti-depressants) உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகளும் காரணமாகலாம்.

பல் வலி

பற்களைக் கடிக்கும் பிரச்னை தொடர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு தாடை வலி (Jaw Pain), தலைவலி (Headache), பற்கள் தேய்மானமடைவது போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். பற்களைக் கடிக்கும் பிரச்னை உள்ளவர்கள், முதலில் பல் மருத்துவரிடம் (Dentist) அல்லது பொது மருத்துவரிடம் (General Physician) சென்று பற்கள் மற்றும் தாடையில் வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா எனப் பரிசோதிக்க வேண்டும். தூக்கப் பிரச்னை இருந்தால், அது சார்ந்த பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

மன அழுத்தம் முக்கியமான காரணமாக இருக்கும் பட்சத்தில், உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெற்று மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...