Doctor Vikatan: எனக்கு அடிக்கடி தலைச்சுற்றல் (Giddiness) ஏற்படுகிறது, ஆனால், ரத்த அழுத்தம் (BP) சரியாகத்தான் இருக்கிறது. இதற்கு வேறு என்ன காரணமாக இருக்கும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை மருத்துவர் வி.எல். அருள்செல்வன் நரம்பியல் சிகிச்சை மருத்துவர் வி.எல். அருள்செல்வன் தலைச்சுற்றல் ஏற்பட பிபி அளவைத்தாண்டி வேறு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். நம்முடைய பேலன்ஸ் சிஸ்டம் (Balance system), மூளைத்தண்டில் (Brain stem) ஆரம்பித்து உள் காதில் (Inner ear) உள்ள பேலன்ஸ் உறுப்பு வரை இருக்கும். இதில் எங்கு பிரச்னை வந்தாலும் நமக்குத் தலைச்சுற்றல் வரலாம். உள் காதில் இருக்கக்கூடிய முக்கியமான பிரச்னைகளில், பிபிபிவி (Benign Paroxysmal Positional Vertigo) எனப்படுவது மிக முக்கியமான காரணம். இந்தப் பிரச்னை பாதித்தால் படுக்கும்போதோ, எழுந்திருக்கும்போதோ தலைச்சுற்றல் வரும். ஆனால், அது ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்காது. விட்டுவிட்டு வந்துகொண்டே இருக்கும். அடுத்தது வெஸ்டிபுலார் நியூரோனைட்டிஸ் (Vestibular neuronitis) என்ற பிரச்னையால் ஏற்படும் தலைச்சுற்றல். அந்த பேலன்ஸ் நரம்பில் வீக்கம் அ...