Skip to main content

Doctor Vikatan: முழங்கால் வலி... மூட்டுத் தேய்மானம்... ஆபரேஷன் இல்லாமல் சரி செய்ய முடியுமா?

Doctor Vikatan: என் வயது 58. எனக்கு கடந்த சில மாதங்களாக மூட்டு வலி இருக்கிறது. முழங்கால் மூட்டுகளில் தேய்மானம் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். அறுவை சிகிச்சை இல்லாமல் இதைச் சரி செய்ய முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  எலும்பு, முழங்கால் மற்றும் தண்டுவட சிறப்பு மருத்துவரும்  ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான நாவலடி சங்கர்.

எலும்பு, முழங்கால் மற்றும் தண்டுவட சிறப்பு மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான நாவலடி சங்கர்

முதுமையின் காரணமாக ஏற்பட்ட தீவிரமடைந்த முழங்கால் தேய்மானத்திற்கு (Advanced Knee Osteoarthritis) அறுவை சிகிச்சை இல்லாத மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பது சிக்கலான ஒரு விஷயம்.

இதில் ரீஜெனரேட்டிவ் (regenerative) சிகிச்சை முறைகள் இருந்தாலும், அவற்றின் முடிவுகள் உங்களது பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும்.

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்க்க அல்லது தள்ளிப்போட ஆர்த்தோபயாலஜிக்ஸ் (Orthobiologics) எனப்படும் பிஆர்பி (PRP - Platelet-Rich Plasma) மற்றும் பிஎம்ஏசி (BMAC - Bone Marrow Aspirate Concentrate) போன்ற தண்டுவடம் சார்ந்த ஸ்டெம் செல் (stem cell) சிகிச்சைகள் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தச் சிகிச்சைகள் முக்கியமாக மூட்டு வீக்கத்தைக் குறைக்கவும், வலியைக் கட்டுப்படுத்தவும், மூட்டின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன. அறுவை சிகிச்சை இல்லாத இந்தப் பராமரிப்பு முறையில், பாதிப்பு மேலும் தீவிரமடைவதைத் தடுத்து, நடமாட்டத்தை மீட்டெடுப்பதே முக்கிய நோக்கமாகும். 

பிசியோதெரபி  (Physiotherapy) எனப்படும் இயன்முறை மருத்துவம்தான், இந்தச் சிகிச்சையின் அடித்தளமாகும். முழங்காலைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் மூட்டின் மீதான அழுத்தத்தைக் குறைக்க முடியும். குறிப்பாக, குவாட்ரிசெப்ஸ் (quadriceps) மற்றும் ஹாம்ஸ்ட்ரிங்ஸ் (hamstrings) தசைகளுக்கான உடற்பயிற்சிகள் உடலின் எடையைச் சமமாகப் பகிர்ந்தளித்து மூட்டு வலியைக் குறைக்கும்.

பிசியோதெரபி (Physiotherapy) எனப்படும் இயன்முறை மருத்துவம்தான், இந்தச் சிகிச்சையின் அடித்தளமாகும்.

குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகள் (Low-impact activities) மூலமும் இதை ஓரளவு சமாளிக்கலாம். அதாவது முழங்கால் மூட்டுகளின் அசைவுத்திறனைப் பராமரிக்க நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யலாம். 

உடல் எடையில் சில கிலோவைக் குறைப்பது கூட முழங்கால் மூட்டுகளின் மீதான  அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கும். முழங்காலில் ஏற்படும் தொடர்ச்சியான வீக்கத்தைக் கட்டுப்படுத்த பிஆர்பி (PRP) போன்ற ஆர்த்தோபயாலஜிக்ஸ் சிகிச்சைகள் குறித்து உங்கள் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.

இவற்றுடன் தகுந்த வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் முழங்கால் பட்டைகளைப் (bracing) பயன்படுத்துவதன் மூலம் அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போட்டு, தினசரி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...