Doctor Vikatan: எனக்கு எப்போதும் அதிகமாக வியர்த்துக்கொண்டே இருக்கிறது. அதீத வியர்வை என்பது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ஏற்படும் இந்த வியர்வைப் பிரச்னையும் இதய பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா? - விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன். கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் ஒருவருக்கு அதிகமான வியர்வை இருந்தால், அது இதய நோய்க்கான அறிகுறியாக இருக்குமா என்ற பயம் உங்களைப் போல பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் அப்படி அர்த்தப்படுத்திக் கொண்டு பயப்படத் தேவையில்லை. பொதுவாக வியர்வை என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். அதிகப்படியான வியர்வை ஏற்படுவது என்பது, மாரடைப்பின் முக்கிய அறிகுறியாக இருந்தாலும், பொதுவாக உடலில் சர்க்கரையின் அளவு (Blood sugar level) குறைந்தால் கூட (Hypoglycemia) இதுபோல அதிகமான வியர்வை ஏற்படுடலாம். உடலில் சர்க்கரையின் அளவு குறையும் போது இப்படி அதிகப்படியாக வியர்க்கும் என்பது சர்க்கரைநோய் உள்ள பலருக்கும் ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயம்தான்...