Skip to main content

Doctor Vikatan: தூக்கத்தின்போது திடீரென உடல் தூக்கிப் போடுவது ஏன்... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: எனக்கு வயது 43. அடிக்கடி தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போல உணர்கிறேன். அதன் காரணமாக தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண்விழிக்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... இதற்கு மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை அவசியமா?

பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.  

மருத்துவர் கே. பாஸ்கர்
மருத்துவர் கே. பாஸ்கர்

தூக்கத்தில் ஏதோ ஒரு பெரிய பாதாளத்தில் விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டு பயத்தில் தூக்கம் கலையலாம். இதை 'ஹிப்னிக் ஜெர்க்' (hypnic jerk) என்று ஆங்கிலத்தில் சொல்வோம். இதனால் தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போன்ற உணர்வு ஏற்படும்.

இதனால் எந்த ஆபத்தும் இல்லை. இந்தப் பிரச்னை நூற்றில் 60, 70 பேருக்கு இருப்பதுதான். இந்தப் பிரச்னை எந்த வயதினருக்கும் வரலாம். இதற்காக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்கத் தேவையில்லை.

தூக்கத்தில் தூக்கிப் போடும் இந்த உணர்வு ஏற்படுவதற்கான சரியான காரணத்தை இதுவரை எந்த மருத்துவ ஆய்வும் கண்டுபிடிக்கவில்லை. தூங்கும்போது நம் உடல் தசைகள் நன்கு தளர்ந்த நிலையில் இருக்கும். 

அப்படித் தசைகள் தளர்ந்திருக்கும்போது, மூளையானது, 'சம்பந்தப்பட்ட நபர் கீழே விழப்போகிறார்... எழுந்திரு' என்பது போல கட்டளையிடுகிறது. அதன் பிறகுதான் நாம் திடுக்கிட்டு எழுந்திருப்போம்.

இப்படித்தான் மருத்துவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதாவது தசைகளின் தளர்வை மூளையானது தவறாகப் புரிந்துகொண்டு கட்டளையிடுவதன் விளைவுதான் இது.

தூக்கத்தில் திடுக்கிட்டு எழுந்திருப்பது, தூக்கிப் போடுவது போன்ற இத்தகைய செயல்களை சில விஷயங்கள் அதிகப்படுத்தலாம்.  அதாவது, தூங்கச் செல்வதற்கு முன் அதிகமாக உடற்பயிற்சிகள் செய்வது, தூங்கப் போவதற்கு முன் அதிகம் காபி குடிப்பது, மன அழுத்தம், படபடப்பு அதிகமிருப்பது போன்றவை காரணமாக, தூக்கத்தில் திடுக்கிட்டு, தூக்கிப்போட்டு எழுந்திருப்பது நடக்கும். இதையெல்லாம் தவிர்த்தாலே போதும். 

தரையில் படுத்திருக்கும்போது வலிப்பு வந்திருந்தால் உராய்வு, சிராய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். சிலர் சிறுநீர், மலம் கழித்திருக்கலாம்.
வலிப்பு

இவற்றைத் தாண்டி, இன்னொரு விஷயத்தில் கவனம் தேவை. அது வலிப்பு நோய். சிலருக்கு தூக்கத்தில்கூட வலிப்பு நோய் வரலாம். அதனால் நாக்கைக் கடித்துக்கொண்டு, ரத்தம்கூட வரலாம். நுரை தள்ளும்... தரையில் படுத்திருக்கும்போது வலிப்பு வந்திருந்தால் உராய்வு, சிராய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். சிலர் சிறுநீர், மலம் கழித்திருக்கலாம். இப்படி ஏதேனும் நடந்திருந்தால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.

'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' (Restless Leg Syndrome) என்றொரு நிலை உண்டு. இந்த பாதிப்பு உள்ளவர்கள் கால்களை ஆட்டிக்கொண்டோ, நீட்டி மடக்கிக் கொண்டோ இருப்பார்கள். பீரியாடிக் லிம்ப் மூவ்வெமன்ட் ஆஃப் ஸ்லீப்' (Periodic Limb Movements of Sleep) என்ற நிலையில் சிலர், இரவு முழுவதும் கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள்.

இதனால் பக்கத்தில் படுத்திருப்போருக்குத்தான் பிரச்னையே தவிர, சம்பந்தப்பட்ட நபருக்கு ஆபத்து இல்லை. இந்த இரண்டு பாதிப்புகளும் சம்பந்தப்பட்டவரை தொந்தரவு செய்தால் மருத்துவரை அணுகலாம். மற்றபடி, எப்போதாவது தூக்கத்தில் தூக்கிப்போடுவது மட்டும் இருந்தால், அதற்காக மருத்துவரைப் பார்க்க வேண்டியதில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...