Doctor Vikatan: ஜிம் செல்பவர்கள் மற்றும் பாடிபில்டிங் செய்பவர்களிடையே உடலை விரைவாகக் கட்டமைக்க அனபாலிக் ஸ்டீராய்டு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக மருத்துவ எச்சரிக்கைகள் வெளியாகி வருகின்றன. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஜிம்மில் கொடுக்கப்படும் ஸ்டீராய்டுகளை உட்கொள்வதால், அது பிற்காலத்தில் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துமா... இயற்கை முறையில் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பவர்களுக்கும், இந்த ஸ்டீராய்டு மாயையில் சிக்கியவர்களுக்கும் உங்களின் அறிவுரை என்ன? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் அனபாலிக் ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துபவர்கள், அதுகுறித்த முறையான கல்வியும் அனுபவமும் உள்ள ஒரு நபரின் வழிகாட்டுதலைப் பெற்று எடுத்துக்கொள்வது நல்லது. அப்படிச் செய்யும்போது உங்களுக்கு உடல்நல பாதிப்புகள் (Health Implication) பெரிய அளவில் வராது. ஏனெனில், அவர்கள் முதலில் உங்களை ரத்தப் பரிசோதனை (Blood Test) செய்யச் சொல்வார்கள். அந்த ரத்தப் பரிசோதனையில் முக்கியமான அளவீடுகள் (Parameters) அனைத்...