Skip to main content

Doctor Vikatan: ஸ்டீராய்டு எடுத்தால் கட்டுக்கோப்பான உடல்வாகு சாத்தியமா... எடை குறையுமா?

Doctor Vikatan: ஜிம் செல்பவர்கள் மற்றும் பாடிபில்டிங் செய்பவர்களிடையே உடலை விரைவாகக் கட்டமைக்க  அனபாலிக்  ஸ்டீராய்டு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக மருத்துவ எச்சரிக்கைகள் வெளியாகி வருகின்றன.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஜிம்மில் கொடுக்கப்படும் ஸ்டீராய்டுகளை உட்கொள்வதால், அது  பிற்காலத்தில்  உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துமா... இயற்கை முறையில் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பவர்களுக்கும், இந்த ஸ்டீராய்டு மாயையில் சிக்கியவர்களுக்கும் உங்களின்  அறிவுரை என்ன?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்.

 ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

அனபாலிக் ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துபவர்கள், அதுகுறித்த முறையான கல்வியும் அனுபவமும் உள்ள ஒரு நபரின் வழிகாட்டுதலைப் பெற்று எடுத்துக்கொள்வது நல்லது. அப்படிச் செய்யும்போது உங்களுக்கு உடல்நல பாதிப்புகள் (Health Implication) பெரிய அளவில் வராது.

ஏனெனில், அவர்கள் முதலில் உங்களை ரத்தப் பரிசோதனை (Blood Test) செய்யச் சொல்வார்கள். அந்த ரத்தப் பரிசோதனையில் முக்கியமான அளவீடுகள் (Parameters) அனைத்தையும் சரிபார்த்து, அதன் அடிப்படையில் உங்களுக்குப் பொருத்தமான ஸ்டீராய்டைப் பரிந்துரைப்பார்கள். இது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

பாடிபில்டிங் போட்டிகளுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக இதனைப் பயன்படுத்துவார்கள். ஏனெனில், உடல் அவ்வளவு கட்டுக்கோப்பாகவும், தசைகள் தெளிவாகவும் (Ripped) தெரிய வேண்டும் என்றால், அவர்கள் இது போன்ற உணவுகளை  (External Substances) எடுத்துக்கொள்வது  அவர்களுக்கு அவசியமாகிறது.

பாடி பில்டர்களுக்குப் பயிற்சி அளிப்பவர்கள், அறிவியல்பூர்வமாக, இதைப் பற்றிப் படித்துவிட்டுத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், பாடி பில்டரின்  உடலுக்குள் ஒரு அனபாலிக் ஸ்டீராய்டு சென்றாலும், பாடி பில்டிங் போட்டிகள் முடிந்த பிறகு அதனை உடலிலிருந்து வெளியேற்றும் 'ஃபிளஷிங் அவுட்' (Flushing Out) என்ற செயல்முறையையும் மேற்கொள்வார்கள். 

இதன் மூலம் உடலில் உள்ள ஸ்டீராய்டு பொருள்கள் அனைத்தும் வெளியேற்றப்படும். இந்தச் செயல்முறைக்கென்று ஒரு குறிப்பிட்ட காலம் (Time) உள்ளது. இதைப் பற்றி நன்கு தெரிந்தவர்களிடம் சென்றால், அவர்கள்  சரியாக வழிநடத்துவார்கள்.

பாடி பில்டரின் உடலுக்குள் ஒரு அனபாலிக் ஸ்டீராய்டு சென்றாலும், பாடி பில்டிங் போட்டிகள் முடிந்த பிறகு அதனை உடலிலிருந்து வெளியேற்றும் 'ஃபிளஷிங் அவுட்' (Flushing Out) என்ற செயல்முறையையும் மேற்கொள்வார்கள்.

இதைப்பற்றி எதுவுமே தெரியாமல், மற்றவர்கள்  ஸ்டீராய்டு எடுக்கிறார்கள், இதன் மூலம் சீக்கிரமாக எடையைக் குறைக்கிறார்கள் (Weight Loss) என்று நீங்களாகவே எடுத்தால், உடல்நல பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும்.

அப்போதுதான் ஸ்டீராய்டு ஆபத்தாக மாறுகிறது. ஏனெனில், அந்த ஸ்டீராய்டை  உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளுமா என்பதும், அதனை எந்த அளவு எடுக்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியாது.

உதாரணத்திற்கு, மருத்துவர் ஒரு மாத்திரையைப் பரிந்துரைக்கும் போது, நம் உடலுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவைத்தான் கொடுப்பார்.  அப்படித்தான் ஸ்டீராய்டும். அது பற்றி எதுவுமே  தெரியாமல், எல்லோரும் எடுக்கிறார்கள் என்பதற்காக நீங்களாகவே எடுத்தால், அது கண்டிப்பாக உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். 

இதயப் பிரச்னைகள் (Heart Problems), சிறுநீரகப் பிரச்னைகள் (Kidney Problems)  உள்ளிட்ட பலவிதமான  பாதிப்புகள் ஏற்படலாம். அனபாலிக் ஸ்டீராய்டுகளைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தெரியாமல், எடுப்பதன் மூலம் உங்கள் உடலை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்.

உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான புரதச்சத்தை ஃபிட்னெஸ் பயிற்சியாளர் அல்லது மருத்துவரின் பரிந்துரையோடு எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு நபர், பாடி பில்டிங் போட்டிக்கெல்லாம் செல்லவில்லை, உடலை மட்டும் கட்டுக்கோப்பாக (Fit) வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால், அவருக்கு ஸ்டீராய்டுகள் எதுவும் தேவையில்லை.
அதற்கு பதிலாக உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான புரதச்சத்தை ஃபிட்னெஸ் பயிற்சியாளர் அல்லது மருத்துவரின் பரிந்துரையோடு எடுத்துக் கொள்ளலாம். போட்டிக்குச் செல்பவராக இருந்தால், தகுந்த நபர்களின் உதவி அவசியம்.

எந்த இலக்கும் இல்லாமல், முறையான வழிகாட்டுதல் இல்லாமல் தாமாகவே இவற்றைப் பயன்படுத்துவது மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...