Skip to main content

Doctor Vikatan: காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது குதிகாலில் வலி... யூரிக் ஆசிட் பிரச்னையா?

Doctor Vikatan: என் வயது 50. கடந்த ஒரு வருடமாக காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது கணுக்காலில் (Heel pain) ஊசி குத்துவது போல் வலிக்கிறது.

கொஞ்சம் தூரம் நடந்த பிறகு வலி குறைந்துவிடுகிறது. இது யூரிக் ஆசிட் பிரச்னையா அல்லது எலும்புத் தேய்மானமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்


கணுக்கால் அல்லது குதிங்கால் பகுதியில் ஏற்படும் வலிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கலாம். உள்ளங்காலில் உள்ள தசைநாரில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சியின் காரணமாக ஏற்படுவது  குதிகால் தசைநார் அழற்சி (Plantar Fasciitis). 

குதிகாலில் உள்ள எலும்பானது தேய்மானம் அடைந்து, அதன் ஓரம் லேசாகக் கூர்மையாக வளரக்கூடும். இது ஒரு கொக்கி (Hook) போன்ற வடிவத்தில் இருக்கும். இதன் நுனிப்பகுதி (Tip) மிகவும் கூர்மையாக இருப்பதால், காலடி எடுத்து வைக்கும்போதோ அல்லது அந்தப் பகுதியில் அழுத்தம் ஏற்படும் போதோ கடுமையான வலி உண்டாக வாய்ப்புள்ளது. இதை குதிகால் எலும்பு வளர்ச்சி (Calcaneal Spur) என்கிறோம்.

கோயில் போன்ற இடங்களில் காலணி இல்லாமல் நடக்கும்போது அல்லது ஏதேனும் ஒரு பொருளின் கூர்மையான விளிம்பில் (Edge) காலை வைக்கும்போது குதிகால் வலி ஏற்படுகிறது. நம்முடைய பாதத்தில் எலும்புக்கும் தரைக்கும் நடுவே தோல், அதற்கு கீழே மெத்தை போன்ற தசைப்பகுதி மற்றும் தசைநார்கள் (Ligaments) உள்ளன.

பாதத்தின் அடியில் 'பிளான்டார் ஃபாசியா' (Plantar fascia) எனப்படும் பெரிய தசைநார் உள்ளது. கூர்மையான பொருள்களின் மீது கால் வைக்கும் போது, இந்தத் தசைநார் கிழிந்து போவதற்கோ அல்லது நசுங்கிப் போவதற்கோ வாய்ப்புகள் அதிகம்.

கோயில் போன்ற இடங்களில் காலணி (செருப்பு) இல்லாமல் நடக்கும்போது அல்லது ஏதேனும் ஒரு பொருளின் கூர்மையான விளிம்பில் (Edge) காலை வைக்கும்போது குதிகால் வலி ஏற்படுகிறது.

படிக்கட்டுகளில் இறங்கும் போதோ அல்லது பேருந்துகளில் ஏறி இறங்கும் போதோ, அவசரத்தில் குதிகாலை மட்டும் வேகமாக ஊன்றி இறங்குவதால், அந்த விளிம்புகளில் ஏற்படும் அழுத்தத்தினால் 'பிளான்டார் ஃபாசைடிஸ்' (Plantar fasciitis) எனப்படும் தசைநார் கிழிவு அல்லது வீக்கம் ஏற்படுகிறது.

இந்தப் பாதிப்பு ஏற்பட்ட பிறகும் நாம் அதைக் கவனிக்காமல் தொடர்ந்து அதன் மேலேயே மிதித்து நடந்துகொண்டிருந்தால், இந்த வலியானது 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது.

வீட்டிற்குள்ளும் வெளியிலும் நடக்கும் போது மைக்ரோனைஸ்டு பாலிமர் (Micronized Polymer Chappal) மெட்டீரியலால் செய்த மிகவும் மென்மையான செருப்புகளைப் பயன்படுத்த வேண்டும். 

சமையலறை போன்ற இடங்களில் நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்கள், அடுப்பின் அருகிலோ, பாத்திரம் கழுவும் சிங்க் (Sink) அருகிலோ அல்லது காய்கறிகள் நறுக்கும் இடங்களிலோ நான்கைந்து மிதியடிகளை ஒன்றாகச் சேர்த்து குஷன் போல அதன் மீது நின்று வேலை செய்யலாம். 

நடக்கும் போது குதிகால் பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்காமல் நடக்கப் பழக வேண்டும்.

வீட்டிற்குள்ளும் வெளியிலும் நடக்கும் போது மைக்ரோனைஸ்டு பாலிமர் (Micronized Polymer Chappal) மெட்டீரியலால் செய்த மிகவும் மென்மையான செருப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த வலி எதனால் ஏற்படுகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய எக்ஸ்ரே (X-ray) எடுத்துப் பார்த்து, அதற்கேற்ப மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை உட்கொள்ளலாம்.

சிலருக்கு காலையில் எழுந்தவுடன் முதல் அடி எடுத்து வைக்கும் போது கடுமையான வலி இருக்கும். உங்களுக்கு அப்படி இருந்தால், அது சர்க்கரை நோய் (Diabetes) அல்லது உடலில் யூரிக் அமிலம் (Uric Acid) அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னையாகவும் இருக்கலாம். எனவே, ரத்தப் பரிசோதனை செய்து இதையும் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...