Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைச் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையைப் பரவலாகக் கேட்க முடிகிறது. இதற்கு ஏதேனும் மருத்துவக் காரணங்கள் உண்டா... கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் என ஏதும் உள்ளனவா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் கோடையில் அதிக வெப்பம் காரணமாக உடல் சீக்கிரம் வறட்சி (Dehydration) அடையும் என்பதால், தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் வெப்பம் உச்சத்தில் இருப்பதால், நம் உடலின் வெப்பநிலையைச் சரியான அளவில் வைத்திருக்க நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம். உடலை நீரேற்றத்துடன் (Hydrate) வைத்திருக்க மோர், இளநீர் மற்றும் பழச்சாறுகளை (சர்க்கரை நோய் இல்லாதவர்கள்) தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். Doctor Vikatan: Weight Loss முயற்சி... சம்மரில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? கோடைக்காலத்திற்கு ஏற்ற வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் மாம்பழம் போன்ற சீசன் பழங்களை அதிகளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மசாலா மற்றும் காரம் அதிகமுள்ள உணவுகளைக் கண்டிப...