Skip to main content

Doctor Vikatan: கோடையின் தாக்கம்... முதியவர்கள் செய்யக் கூடாததும் செய்ய வேண்டியதும்!

Doctor Vikatan: இந்த வருடம் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இள வயதினரே இதைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். இந்நிலையில், முதியவர்கள் உள்ள வீடுகளில் அவர்களை எப்படிப் பார்த்துக்கொள்வது... அவர்களுக்கான பிரத்யேக வழிகாட்டல், மருத்துவ ஆலோசனைகள் ஏதும் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

இந்த ஆண்டு குளிர்காலம் எந்த அளவிற்குக் கடுமையாக இருந்ததோ, அதே அளவிற்கு கோடைக்கால வெப்பமும் மிக அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை ஏப்ரல் மாத வெயிலே உணர்த்தியிருக்கிறது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே, அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மிகவும் கொடுமையாக இருப்பதை நாம் அனுபவித்து வருகிறோம்.

இந்தக் கோடைகாலம் அனைவருக்குமே சவாலானதுதான் என்றாலும், முதியவர்களுக்கு இது  இன்னும் அதிக சவாலானதாக இருக்கும். அவர்கள் மிகுந்த கவனத்தோடு இந்த நாள்களைக் கடக்க வேண்டும்.  மிக முக்கியமாக, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முதியவர்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் பேருந்து அல்லது ஆட்டோ போன்ற திறந்தவெளி வாகனங்களில் பயணம் செய்வது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்க்கலாம்.  வெப்பம் அதிகரிப்பதால் எல்லோருக்குமே, டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் நீர் இழப்பு பிரச்னை ஏற்படும். அதாவது உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே, போதுமான அளவு தண்ணீர் குடித்து, நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke) பாதிக்கும் அபாயம் அதிகரிக்கும். அதன் விளைவாக உடலில் சோடியம் அளவு குறையும். இதை ஹைப்போநெட்ரீமியா (Hyponatremia) என்று சொல்வோம்.

ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke) பாதிக்கும் அபாயம் அதிகரிக்கும். அதன் விளைவாக உடலில் சோடியம் அளவு குறையும். இதை 
ஹைப்போநெட்ரீமியா (Hyponatremia)  என்று சொல்வோம்.  அப்போது நினைவு தப்பிப் போகும் நிலை ஏற்படும். இது பக்கவாதம் (Stroke) போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும் என்பதால் பலருக்கும் குழப்பம் ஏற்படலாம்.  பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து டெஸ்ட் செய்யும்போது, அவர்களுக்கு எலக்ட்ரோலைட்ஸ் குறைபாடு ஏற்பட்டிருப்பது தெரியவரும். அதாவது,  சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் போன்ற தாதுக்கள் குறைவதால் நோயாளிகளை ஐசியூ-வில் (ICU) வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை கூட ஏற்படலாம்.


இந்த நிலை ஏற்படாமல் இருக்க, காலையிலும் மாலையிலும் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்துக் குடிப்பது நல்லது.  மாலை நேரங்களில் உடல் சோர்வாக இருந்தால், எலக்ட்ரால்  (Electral)  பவுடரைத் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.  வீட்டிற்குள் வெப்ப அலை வீசாமல் இருக்க ஜன்னல்களில் திரைச்சீலைகள் (Screens) போடலாம். ஏசி பயன்படுத்துபவர்கள் பகல் முழுவதும் 26 டிகிரி வெப்பநிலையில் அதை ஓடவிடுவது சிறந்தது. கோடை வெயிலிலிருந்து தப்பிக்க முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் தகுந்த பாதுகாப்புடன் இருப்பது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...