Skip to main content

Posts

Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைத் தவிர்க்கச் சொல்வதற்கு என்ன காரணம்?

Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைச் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையைப் பரவலாகக் கேட்க முடிகிறது. இதற்கு ஏதேனும் மருத்துவக் காரணங்கள் உண்டா... கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் என ஏதும் உள்ளனவா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் கோடையில் அதிக வெப்பம் காரணமாக உடல் சீக்கிரம் வறட்சி (Dehydration) அடையும் என்பதால், தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் வெப்பம் உச்சத்தில் இருப்பதால், நம் உடலின் வெப்பநிலையைச் சரியான அளவில் வைத்திருக்க நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம். உடலை நீரேற்றத்துடன் (Hydrate) வைத்திருக்க மோர், இளநீர் மற்றும் பழச்சாறுகளை (சர்க்கரை நோய் இல்லாதவர்கள்) தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். Doctor Vikatan: Weight Loss முயற்சி... சம்மரில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? கோடைக்காலத்திற்கு ஏற்ற வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் மாம்பழம் போன்ற சீசன் பழங்களை அதிகளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மசாலா மற்றும் காரம் அதிகமுள்ள உணவுகளைக் கண்டிப...

Doctor Vikatan: அளவுக்கதிக வெயில்... சூரிய வெளிச்சம் கண்களில் பட்டால் பார்வை பாதிக்கப்படுமா?

Doctor Vikatan: வெயில் காலத்தில் கண்களுக்கு கட்டாயம் கூலிங் கிளாஸ் அணிய வேண்டுமா... சூரிய ஒளி கண்களில் நேரடியாகப் பட்டால் விழித்திரைக்கு பாதிப்பு ஏற்படுமா? சாதாரண கண்ணாடி போதுமா, கூலிங் கிளாஸ்தான் அணிய வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய்ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர் அதிகப்படியான வெயில் கண்களைப் பல வழிகளில் பாதிக்கும். சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்கள் (UV rays) கண்களை பாதித்து பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அவற்றில் முக்கியமான பாதிப்பு கேட்டராக்ட் எனப்படும் கண்புரை (Cataracts). புறஊதா கதிர்கள் கண்களில் கண்புரை ஏற்படுவதற்குக் காரணமாகின்றன. அடுத்து, புறஊதாக் கதிர்கள்,  விழித்திரையின் (Retina) மையப்பகுதியான மேகுலாவை  சேதப்படுத்தலாம். அதனால் வரும் பாதிப்பை  மேகுலர் டீஜெனரேஷன் (Macular Degeneration) என்கிறோம்.  விழித்திரையில் உள்ள நரம்புத் திசுக்களை பாதிப்பதால் சோலார் ரெட்டினோபதி (Solar Retinopathy) என்ற பிரச்னை வரலாம்.  சூரியனின் புறஊதாக் கதிர்கள், கண்களின் வெளிப்புறப் பகுதியையும் பாதிக்கலாம். அந்த வகையில்,  ...

Doctor Vikatan: கோடைக்காலம்: கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா அதீத வெயில்?

Doctor Vikatan: என் தோழி கர்ப்பமாக இருக்கிறாள்.  கர்ப்பம் உறுதியான நாள் முதல் வீட்டைவிட்டே வெளியே வர மறுக்கிறாள். வெயிலின் தாக்கம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்கும் என உறுதியாக நம்புகிறாள்.  அவளது பயம் அனாவசியமானதுதானே.... வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக வழிகாட்டல் ஏதும் உண்டா? பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மருத்துவர் ஸ்ரீதேவி கோடைக்காலத்தில் எல்லோருக்குமான பொதுவான அறிவுரையாகச் சொல்லப்படுவதுதான் கர்ப்பிணிகளுக்கும் வலியுறுத்தப்படுகிறது. அது டீஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்வது. மிக அதிக வெப்பமான சூழலுக்கு வெளிப்படும்போது, உடலிலுள்ள நீர்ச்சத்து குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதன் விளைவாக தலைச்சுற்றல், வாந்தி, களைப்பாக உணர்வது போன்ற அறிகுறிகள் வரலாம். இதைத் தவிர்க்க அவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சமாக 3 லிட்டராவது குடிக்க வேண்டும். வெறும் தண்ணீராகக் குடிக்கப் பிடிக்காதவர்கள், இளநீர், மோர் போன்று குடித்து உடலை நீர் வறட்சியின்றி வைத்துக்கொள்ள வேண்டும். வெப்ப அலை வீசும்போதும...

Doctor Vikatan: கோடையின் தாக்கம்... முதியவர்கள் செய்யக் கூடாததும் செய்ய வேண்டியதும்!

Doctor Vikatan: இந்த வருடம் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இள வயதினரே இதைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். இந்நிலையில், முதியவர்கள் உள்ள வீடுகளில் அவர்களை எப்படிப் பார்த்துக்கொள்வது... அவர்களுக்கான பிரத்யேக வழிகாட்டல், மருத்துவ ஆலோசனைகள் ஏதும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் இந்த ஆண்டு குளிர்காலம் எந்த அளவிற்குக் கடுமையாக இருந்ததோ, அதே அளவிற்கு கோடைக்கால வெப்பமும் மிக அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை ஏப்ரல் மாத வெயிலே உணர்த்தியிருக்கிறது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே, அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மிகவும் கொடுமையாக இருப்பதை நாம் அனுபவித்து வருகிறோம். இந்தக் கோடைகாலம் அனைவருக்குமே சவாலானதுதான் என்றாலும், முதியவர்களுக்கு இது  இன்னும் அதிக சவாலானதாக இருக்கும். அவர்கள் மிகுந்த கவனத்தோடு இந்த நாள்களைக் கடக்க வேண்டும்.  மிக முக்கியமாக, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முதியவர்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் பேருந்து அல்லது ஆட்டோ போன்ற திறந...