Doctor Vikatan: கோவிட் தொற்று முடிந்துவிட்டதாக கடந்த சில வருடங்களாகத்தான் ஓரளவு நிம்மதியாக இருக்கிறோம். இந்நிலையில் வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா வேரியன்ட் பரவ ஆரம்பித்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதுவரை பார்த்ததிலேயே இந்த உருமாற்றம் சற்றே தீவிரமாக இருக்கும் என்றும் சொல்கிறார்களே... அது உண்மையா... ஏற்கெனவே போட்டுக்கொண்ட தடுப்பூசிகள் இந்தத் தொற்றுக்கு எதிராகப் போராட உதவாதா? பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி மருத்துவர் சஃபி சுலைமான் நீங்கள் கேள்விப்பட்ட தகவல் நூறு சதவிகிதம் உண்மைதான். கோவிட் 19 தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே, அதன் உருமாற்றங்களையும் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவற்றில் ஒமிக்ரான் (Omicron) என்ற உருமாற்றம் மிக முக்கியமானதாக இருந்ததையும் அறிவோம். கோவிட் தொற்றின் இரண்டாவது அலை முடிந்ததும் ஒமிக்ரான் பரவல் ஆரம்பித்தது. SARS-CoV-2 என்பதன் உருமாற்றம்தான் ஒமிக்ரான். அதற்கடுத்து பல உருமாற்றங்கள் வந்தன. ஆனால், அவை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. சில உருமாற்றங்க...