Skip to main content

Doctor Vikatan: ஆர்.ஹெச் ரத்தப் பிரிவு உள்ள கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தில் சிக்கல் வருமா?

Doctor Vikatan: நான் ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவைச் சேர்ந்தவள். முதல்முறையாக கர்ப்பமாக இருக்கிறேன். ஆர்.ஹெச் ரத்தப் பிரிவைச் சேர்ந்த கர்ப்பிணிகள், மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அந்த ரத்தப் பிரிவால், பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றெல்லாம் சொல்லப்படுகிறதே... அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை... நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப் புற்றுநோய் சிகிச்சை  மருத்துவர் அருணா.

ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.

கர்ப்ப காலத்தில் எல்லாப் பெண்களும் ரத்தப் பிரிவை செக் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். கணவரின் ரத்தப் பிரிவையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தப்பிரிவு உள்ள கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால சிக்கல்கள் எதுவும் வர வாய்ப்பில்லை. அதுவே அந்தப் பெண்ணுக்கு ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவும் கணவருக்கு பாசிட்டிவ் ரத்தப் பிரிவும் இருந்தால் குழந்தையும் பாசிட்டிவ் ரத்தப் பிரிவுடன் பிறக்க 50 சதவிகித வாய்ப்புகள் உண்டு. 

அம்மாவின் ரத்தப் பிரிவு நெகட்டிவ், குழந்தையின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ் என்ற பட்சத்தில் பாசிட்டிவ் அணுக்களுக்கு அம்மாவின் உடலில் ஆன்டிபாடி உருவாகும். தாய்வழியே குழந்தைக்கு ரத்தம் மூலம் ஊட்டச்சத்துகள் செல்லும்போது குழந்தைக்கு ரத்தச்சோகை ஏற்படலாம். இந்தப் பிரச்னைக்கு 'ஆர்.ஹெச் ஐசோஇம்யூனைஸேஷன் (Rh Isoimmunization) என்று பெயர்.  

முதல் பிரசவத்தில் பாதிப்புகள் குறைவாக இருக்கலாம். அடுத்தடுத்த பிரசவங்களில் பாதிப்புகள் கூடிக்கொண்டே போகும். அதாவது முதல் பிரசவத்தில் குழந்தை பிறந்த 24 மணி நேரத்தில் மஞ்சள்காமாலை பாதித்து போட்டோதெரபி கொடுக்கப்பட்டிருக்கலாம். அதுவே இரண்டாவது குழந்தைக்கு தாயின் வயிற்றில் வளரும்போதே ரத்தச்சோகை வந்து, குழந்தை வீங்கி, பிரசவத்தின்போதே இன்ட்ரா யூட்ரைன் பிளட் டிரான்ஸ்ஃபியூஷன் தேவைப்படலாம்.  இதைத் தவிர்க்க ஆன்டி டி (Anti-D Injection) என்ற ஊசி இருக்கிறது. 

கர்ப்பிணி

அம்மாவுக்கு  ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவும் அப்பாவுக்கு பாசிட்டிவ் ரத்தப்பிரிவும் இருந்தால் கர்ப்பத்தின் இடையிலோ, குழந்தை பிறந்த உடனேயோ அல்லது அபார்ஷன் ஆன நிலையிலோ ஆன்டி டி ஊசி போடப்படும். குழந்தை பிறந்ததும் அதற்கு ஹீமோகுளோபின் அளவும் மஞ்சள்காமாலையும் எவ்வளவு என்பது பார்க்கப்பட வேண்டும். குழந்தை பிறந்த 90 நாள்களுக்குத்தான் இந்தப் பிரச்னை இருக்கும். அதன் பிறகு குழந்தை முழுமையாக குணமாகிவிடும்.

பொதுவாக, கர்ப்பம் உறுதியான நிலையில், எல்லாப் பெண்களுக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்படும்.   அந்தப் பெண்ணுக்கு ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவு இருப்பது தெரிந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மகப்பேறு மருத்துவரே வழிகாட்டுவார். உங்கள் விஷயத்தில் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை செய்யுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...