Doctor Vikatan: பீரியட்ஸ் ஆனதும் தலைக்குக் குளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவது ஏன்... அதற்கு மருத்துவ காரணம் ஏதாவது உண்டா.... உடற்பயிற்சிகள் செய்தால், குறிப்பாக ஸ்கிப்பிங் பயிற்சியால் வழக்கத்தைவிட பீரியட்ஸ் முன்னரே வரும் என்பது உண்மையா... பீரியட்ஸின் போது உடற்பயிற்சிகள் செய்யலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். நித்யா ராமச்சந்திரன் Doctor Vikatan: மதிய நேரத்தில் தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா? பீரியட்ஸ் நாள்களில் தலைக்குக் குளிப்பது அவசியம் என்றெல்லாம் இல்லை. சில குடும்பங்களில் அது காலங்காலமாக ஒரு வழக்கமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. குளித்தால் உடல் ரிலாக்ஸ் ஆகும் என்பதும், ஒருவித புத்துணர்வை உணர்வோம் என்பதும் நாம் அறிந்ததே. பீரியட்ஸ் நாள்களில் ஏற்கெனவே உடல், மன ரீதியாக சற்று மந்தமாக உணர்வார்கள் பெண்கள். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும். மனநிலையை சற்று மாற்றும். அதற்காக குளிக்கலாம், தவறில்லை. மற்றபடி அது கட்டாயமெல்லாம் இல்லை....