Skip to main content

`காவல் கரங்கள்' திட்டத்திற்கு அவசரநிலை சிகிச்சை ஊர்தியை வழங்கும் அதுல்யா சீனியர் கேர்!

மூத்தகுடிமக்களின் நலவாழ்வு மேலும் மேம்படுத்த வேண்டுமென்ற இலக்கை நோக்கிய ஒரு முன்னேற்ற நடவடிக்கையாக, பெருநகர சென்னை காவல்துறையின் சிறப்பான "காவல் கரங்கள்" திட்டத்தோடு அதுல்யா சீனியர் கேர் பெருமிதத்துடன் கைகோர்த்து செயல்படுகிறது. குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நபர்கள் மற்றும் கவனிப்பின்றி விடப்பட்டிருக்கும் முதியோர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம் தொடர்பான சேவைகளை வழங்குவது இந்த உன்னதமான முன்னெடுப்பு முயற்சியின் நோக்கமாகும். வசதியற்ற ஏழை, எளிய மக்களுக்கும், முதியோர்களுக்கும் விரிவான சிகிச்சை பாரமரிப்பை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளை இந்த முன்னெடுப்பு திட்டம் சிறப்பாக பயன்படுத்துகிறது.

அதுல்யா சீனியர் கேர்

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல்துறை கூடுதல் ஆணையர் திரு. கபில் குமார் சி சாதகர் (ஐபிஎஸ்) மற்றும் அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் காவல்துறையின் பிற உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். மூத்தகுடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் சமூக நலவாழ்வு மீது சென்னை காவல்துறையுடன் அதுல்யா கொண்டிருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

"காவல் கரங்கள்" செயல்திட்டத்தின் திறன்களை கணிசமாக உயர்த்தும் நோக்கத்தோடு அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு அவசரநிலை சிகிச்சை ஊர்தியை (ஆம்புலன்ஸ்) அதுல்யா சீனியர் கேர் தனது பங்களிப்பாக வழங்கியிருக்கிறது. ஆதாவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு உடனடி மருத்துவ கவளிப்பை வழங்கி அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மையங்களுக்கு அழைத்துச் செல்கிற மீட்பு நடவடிக்கைகளில் இந்த பிரதயேக ஆம்புலன்ஸ் முக்கிய பங்காற்றும். சாலை ஓரங்களிலும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் மீட்கப்படுகிற முதியோர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் பயணத்தின்போதே சாத்தியமுள்ள சிறந்த சிகிச்சை கவனிப்பை பெறுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து நவீன மருத்துவ சாதனங்களும் இந்த ஆம்புலன்ஸ்-ல் நிறுவப்பட்டுள்ளன.

அதுல்யா சீனியர் கேர்

அதுல்யா சீனியர் கேர்-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலரான திரு ஜி ப்ரீனிவாசன், சமூக நலனுக்கான இந்த ஒத்துழைப்பு திட்டம் குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கையில், "நமது மூத்தகுடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் சிறப்பாக்கும் குறிக்கோள் மீது அதுல்யாவில் நாங்கள் எப்போதும் உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கிறோம். "காவல் காங்கள்" திட்டத்தோடு கைகோர்த்து செயல்படுவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்கள், அவர்கள் பெறுவதற்கான சிகிச்சை பராமரிப்பையும், கவளிப்பையும் பெறுவதை உறுதி செய்யும் வகையில் எமது சேவை பரப்பையும் மற்றும் தாக்கத்தையும் மேலும் விரிவுபடுத்த இந்த ஒத்துழைப்பு எங்களுக்கு உதவுகிறது. இந்த உன்னதமான நோக்கத்திற்காக ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்குவதை ஒரு கவுரவமாக நாங்கள் கருதுகிறோம். இந்த முனைப்பு திட்டத்திற்கு மனமார்ந்த ஆதரவை தொடர்ந்து வழங்குவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம். நமது முதியோர்களுக்கு அதிக பாதுகாப்பான, அதிக கனிவும், பரிவும் கலந்த சூழலை உருவாக்குவது எமது இலக்காகும். அந்த குறிக்கோள் இலக்கை நோக்கிய பயணத்தில் மாநகர காவல்துறையுடன் மேற்கொள்ளப்படும் இக்கூட்டாண்மை ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாகும்" என்று கூறினார்.

அதுல்யா சீனியர் கேர் மற்றும் பெருநகர சென்னை காவல்துறையின் ஒரு முன்னெடுப்பான "காவல் கரங்கள் திட்டத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு, இதன் திறன் மேம்பாட்டில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். தேவையிலுள்ள அதிக எண்ணிக்கையிலான நபர்களை சென்றடையவும் மற்றும் அவர்களுக்கு உதவவும் இது உதவும். வயதில் முதிர்ந்த நபர்களுக்கு உடல்சார்ந்த, உணர்வு சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த நலவாழ்வு தேவைகளை பூர்த்தி செய்வதற்கென பல்வேறு வசதிகளை வழங்கிவரும் அதுல்யா சீனியர் கேர்.

மூத்தகுடிமக்களுக்கான பராமரிப்பு சேவைகள் வழங்குவதில் தொடர்ந்து முதன்மை வகிக்கிறது. இந்த கூட்டாண்மை நடவடிக்கையின் வழியாக சமூக பொறுப்புறுதி மற்றும் சமுதாய நலவாழ்வின் மீதான தனது அர்ப்பணிப்பையும், வாக்குறுதியையும் அதுல்யா மீண்டும் வலுப்படுத்தியிருக்கிறது. வயது முதிர்ந்த ஒவ்வொரு நபரும் கண்ணியத்தோடும். மரியாதையோடும் நடத்தப்படுகிற ஒரு உலகை உருவாக்குவதில் இந்நிறுவனம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையை நிஜமாக்குவதற்கான செயல்திட்டத்தில் இந்த ஒத்துழைப்பு ஒரு முன்னேற்ற நடவடிக்கையாகும்.

அதுல்யா சீனியர் கேர்

அதுல்யா சீனியர் கேர் மற்றும் சென்னை காவல் துறையின் "காவல் கரங்கள்" என்பதற்கும் இடையிலான இக்கூட்டாண்மை, பிற பெருநிறுவனங்களுள் பின்பற்றுவதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டை நிறுவியிருக்கிறது. சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நிறுவனங்கள் மற்றும் சமூக உறுப்பினர்களின் ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. ஆதரவற்ற, நோய்வாய்ப்பட்ட மூத்தகுடிமக்களின் வாழ்க்கையில் ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க பெருநகர சென்னை காவல்துறையோடும் மற்றும் பிற கூட்டாளிகளோடும் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து செயல்படுவதை அதுல்யா சீனியர் கேர் ஆவலுடன் எதிர்நோக்குகிறது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...