Doctor Vikatan: பொதுவாக மாரடைப்பு என்பது 50 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதிலும் பெண்களுக்கு அந்த ரிஸ்க் குறைவு என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஆனால், சமீப காலமாக இளவயதினரும் பெண்களும் மாரடைப்பு பாதித்து உயிரிழக்கும் சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம். உண்மையில் அவர்களுக்கு என்னதான் நடக்கிறது...? இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மூத்த இதயநோய் மருத்துவர் சொக்கலிங்கம். மருத்துவர் சொக்கலிங்கம் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், இதயத்தின் ரத்தக்குழாய்களின் அமைப்பு, மற்றும் அவற்றில் நடக்கும் மாறுதல்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதயத்தின் வலது, இடது பக்கங்களில் 2- 3 மில்லி மீட்டர் அளவில் இரண்டு இதய ரத்தக் குழாய்கள் இருக்கும். ரத்தத்தில் ஆக்ஸிஜன், சர்க்கரை, மிக முக்கியமாக கொலஸ்ட்ரால் ஆகியவை இருக்க வேண்டும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்பது இல்லை என்றால் இதயம், மூளை என எல்லாமே செயலற்றுப் போய், மனிதன் இறந்துவிடுவான். மகிழ்ச்சியான மனநிலை இதய ந...