Doctor Vikatan: என் நண்பர் ஒருவர் தினமும் காலையில் இளநீர் குடிப்பதை பல வருடங்களாகப் பின்பற்றி வருகிறார். வெயில் காலத்தில் மட்டுமன்றி, மழை, குளிர்காலங்களிலும் குடிப்பார். இப்படி தினமும் இளநீர் குடிப்பது சரியானதா... அதனால் ஆரோக்கியம் மேம்படுமா... எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் இளநீரில் பொட்டாசியம் சத்து மிக அதிகம். பொட்டாசியம் சத்தானது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அவசியமானது. வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது நீரிழப்பை ஈடுசெய்ய இளநீர் பெரிதும் உதவும். இதயநலன் காப்பதிலும் இளநீருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆன்டிஏஜிங் தன்மைகள் கொண்டது என்பதால், அடிக்கடி இளநீர் சாப்பிடுவோருக்கு முதுமைத்தோற்றம் தள்ளிப்போகும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். 'என்னுடைய ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது' என்று சொல்பவர்கள், மூன்றுமாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவை கணக்கிடும் ஹெச்பிஏ1சி...