2010-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போது, அமெரிக்கா ஊழல், மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அது தொடர்பான ஆவணங்களை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜூலியன் அஸாஞ்சே ஹேக் செய்து வெளியிட்டார். அது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க இராணுவத்தின் தவறுகளை அம்பலப்படுத்தும் ஒரு பத்திரிகையாளராகவே ஜூலியன் அஸாஞ்சே செயல்பட்டதாக ஒரு தரப்பினரும்,ஜூலியன் அஸாஞ்சே
அவரின் நடவடிக்கைகள் முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும் செயல்பாடுகள், நாட்டின் சட்டங்களை மீறும் செயல் என மற்றொரு தரப்பினரும் வாதிட்டனர். இதற்கிடையில், அமெரிக்கா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அதே நேரம் ஜூலியன் அஸாஞ்சே மீது பாலியல் தொடர்பான குற்றம்சாட்டப்பட்டு அவரை கைது செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனால் அவர் 2012-ம் ஆண்டு லண்டனின் ஈக்வடார் தூதரகம் மூலம் அடைக்கலம் கேட்டு தஞ்சமடைந்தார்.
அவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்தால் அவர் மீது மனித உரிமை மீறல்கள் அரங்கேற்றப்படக் கூடும் என ஈக்வடார் தூதரகம் அவருக்கு 2019 வரை அடைக்கலம் கொடுத்தது. அதன் பிறகு அவரை பிரிட்டிஷ் காவல்துறை, அமெரிக்காவை உளவு பார்த்தது, ரகசிய ஆவணங்களை வெளிப்படுத்தியது உள்ளிட்ட 17 குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்ததால், அவர் கடந்த 5 ஆண்டுகளாக லண்டன் சிறையில் இருந்தார்.ஜூலியன் அஸாஞ்சே
இந்த நிலையில், ஜூலியன் அஸாஞ்சே தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஜூலியன் அஸாஞ்சே தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
மேலும், ஆஸ்திரேலிய அரசுடனான அமெரிக்காவின் ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு, ஜூலியன் அஸாஞ்சேவுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால், ஜூலியன் அஸாஞ்சே தற்போது பிரிட்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் செய்யப்பட்டிருக்கிறார்.ஜூலியன் அஸாஞ்சே
நாளை மதியம் அமெரிக்காவில் ஆஜராகவிருக்கும் ஜூலியன் அஸாஞ்சேவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் பிரிட்டனின் லண்டன் சிறையில் 5 ஆண்டுகள் இருந்துவிட்ட நிலையில், அது இந்த தண்டனையிலிருந்து கழிக்கப்படும் எனக் கருதப்படுவதால், அவர் விரைவில் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குச் செல்வார் எனவும் கூறப்படுகிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88``ஜூலியஸ் அசாஞ்சேவை நாடு கடத்தலாம்..!" - இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி
http://dlvr.it/T8kcZR

Comments
Post a Comment