அனைத்துப் பற்களும் சீராக ஒரே நிறத்தில் இல்லாமல், அங்கங்கே கறை பிடித்தது போலவும், வெள்ளை நிறப் புள்ளிகள் இருப்பது போல பல் அமைப்பு இருப்பதைப் பார்த்திருப்போம். குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்தப் பிரச்னை பொதுவாகக் காணப்படுகிறது. இதனை மருத்துவ சொற்களில் ஃப்ளூரோசிஸ் (Fluorosis) என்கின்றனர். இதுபற்றிய கூடுதல் விவரங்களை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா. ஃப்ளூரோசிஸ் (Fluorosis) ஃப்ளூரைடு (Fluoride) என்பது இயற்கையாக உருவாகும் ஒருவகை தாதுப்பொருள் (mineral). இது நிலத்தடி நீரில் காணப்படலாம். நாம் சாப்பிடும் பால், சர்க்கரை உள்ளிட்ட சில உணவுகளிலும் குறைந்த அளவில் காணப்படும். இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது ஃப்ளூரைடு உடலின் உள்ளே செல்கிறது. நம் உடல் அளவுக்கு அதிகமாக ஃப்ளூரைடை கிரகிக்கும்போது ஏற்படும் பிரச்னைதான் ஃப்ளூரோசிஸ். இந்தப் பிரச்னை பற்களிலும் (Dental Fluorosis) அல்லது எலும்பிலும் (Skeletal Fluorosis) ஏற்படலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... பற்களில் வெள்ளை நிற புள்ளிகள், பழுப்பு நிறமாக மாறுவது, பற்களின் மேலே உள்ள லேயரான எனாமல் நீங்கி உடைவது (Chi...