Skip to main content

தைவானைச் சுற்றி வட்டமடிக்கும் சீன ராணுவம்... உச்சக்கட்ட பரபரப்பின் பின்னணி!

கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடு தைவான். சீனாவின் தென் கிழக்கு கடற்கரையிலிருந்து சுமார் 110 மைல் தொலைவில் தைவான் அமைந்திருக்கிறது. தைவானை தன்னிடமிருந்து பிரிந்துசென்ற ஒரு மாகாணமாகவே சீனா பார்த்துவருகிறது. எனவே, தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று சீனா நினைக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்

சமீபத்தில் தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றார். அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, தைவானைச் சுற்றி சீனா ராணுவப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தது. இது, அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தைவான் தனது ஆளுகைக்கு உள்பட்ட பகுதி என்று சீனா உரிமை கோருவதற்கு நீண்ட வரலாற்று பின்னணி இருக்கிறது. ஜப்பானின் பிடியில் இருந்த தைவான், இரண்டாம் உலகப் போரில் சீனாவால் ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பிறகு, தைவானிலிருந்து ஜப்பான் வெளியேறியது. சீனக் கொடியும், தைவான் கொடியும்

அதன் பிறகு, சீனக் குடியரசின் அதிகாரப்பூர்வ பகுதியாக தைவான் மாறியது. அடுத்த சில ஆண்டுகளில், சீனாவில் உள்நாட்டுப் போர் மூண்டது. அப்போது சீனாவின் ராணுவத் தளபதியான சாங் காய் ஷேக்கின் ராணுவம், புரட்சியாளர் மா சே துங் தலைமையிலான கம்யூனிஸ்ட் ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது.

அதன் பிறகு, சாங் காய் ஷேக்கும், அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 15 லட்சம் பேரும் சீனாவை விட்டு வெளியேறி தைவானில் குடியேறினர். அங்கு, சர்வாதிகார ஆட்சியை சாங் காய் ஷேக் நடத்தினார். அவரது மறைவுக்குப் பிறகு, தைவானில் ஜனநாயகம் திரும்பியது. அங்கு முதன் முறையாக 1996-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.மாசேதுங்

தற்போது தைவானை 12 நாடுகள் மட்டுமே அங்கீகரித்திருக்கின்றன. தைவானை அங்கீகரிக்கக் கூடாது என்று சீனா உள்ளிட்ட நாடுகள் ராஜாங்க ரீதியில் அழுத்தங்களைக் கொடுத்துவருகின்றன. ஆனாலும், தைவானுக்கென்று தனி அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. தைவானுக்கு சொந்த ராணுவம் இருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்ற சூழலில், அங்கு ராணுவ நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டிருக்கிறது. மே 23-ம் தேதி நடைபெற்ற அந்த ராணுவ நடவடிக்கைகள் ஒரு தாக்குதல் போன்ற சூழலை உருவாக்கியிருக்கிறது என்று தைவான் ராணுவத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். போர்க் கப்பல்

போர் விமானங்களையும், கப்பல்களையும் சீனா அனுப்பியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. தைவானிடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான திறன் குறித்த சோதனையாகவே இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக சீன ராணுவம் கூறியிருக்கிறது. மேலும், ’பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கான தண்டனைதான் இது’ என்று சீனா கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.பிரசாந்த் கிஷோரை கேள்விகளால் தண்ணீர் குடிக்க வைத்த கரண் தாப்பர்?! - பேட்டியும் பின்புலமும்!

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவு சமீபகாலமாக மிகவும் மோசமாகியிருக்கிறது. தற்போது, தைவான், அதன் அருகில் இருக்கும் சில தீவுப்பகுதிகளில் சீனாவின் ராணுவம், விமானப்படை, கப்பற்படை, ராக்கெட் படை ஆகியவற்றை பயிற்சியில் ஈடுபடுத்தியதால், நிலைமை மேலும் மோசடைந்திருக்கிறது. போர் கப்பல்

சீனாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்க தைவானும் தனது ராணுவப்படைகளை இறக்கிவிட்டதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்திருக்கிறது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சீனா செயல்படுவதாகவும் தைவான் குற்றம்சாட்டியிருக்கிறது. ‘வில்லியம் லாய் ஒரு பிரிவினைவாதி’ என்று விமர்சிக்கும் சீனா, அவர் தைவானின் அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டதை விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடு தான் இந்த போர் ஒத்திகை.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />

http://dlvr.it/T7Mq3F

Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...