Skip to main content

Posts

Happy Teeth: உடையும் பற்கள், வெள்ளை நிறப் புள்ளிகள்... Fluorosis பிரச்னையாக இருக்கலாம்..!

அனைத்துப் பற்களும் சீராக ஒரே நிறத்தில் இல்லாமல், அங்கங்கே கறை பிடித்தது போலவும், வெள்ளை நிறப் புள்ளிகள் இருப்பது போல பல் அமைப்பு இருப்பதைப் பார்த்திருப்போம். குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்தப் பிரச்னை பொதுவாகக் காணப்படுகிறது. இதனை மருத்துவ சொற்களில் ஃப்ளூரோசிஸ் (Fluorosis) என்கின்றனர். இதுபற்றிய கூடுதல் விவரங்களை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா. ஃப்ளூரோசிஸ் (Fluorosis) ஃப்ளூரைடு (Fluoride) என்பது இயற்கையாக உருவாகும் ஒருவகை தாதுப்பொருள் (mineral). இது நிலத்தடி நீரில் காணப்படலாம். நாம் சாப்பிடும் பால், சர்க்கரை உள்ளிட்ட சில உணவுகளிலும் குறைந்த அளவில் காணப்படும். இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது ஃப்ளூரைடு உடலின் உள்ளே செல்கிறது. நம் உடல் அளவுக்கு அதிகமாக ஃப்ளூரைடை கிரகிக்கும்போது ஏற்படும் பிரச்னைதான் ஃப்ளூரோசிஸ். இந்தப் பிரச்னை பற்களிலும் (Dental Fluorosis) அல்லது எலும்பிலும் (Skeletal Fluorosis) ஏற்படலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... பற்களில் வெள்ளை நிற புள்ளிகள், பழுப்பு நிறமாக மாறுவது, பற்களின் மேலே உள்ள லேயரான எனாமல் நீங்கி உடைவது (Chi...

Doctor Vikatan: கழுத்து வலி உள்ளவர்கள் தலையணை இல்லாமல் உறங்க வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான கழுத்து வலி இருக்கிறது. ஜெல், ஆயின்மென்ட், வலி நிவாரணி எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்த பிறகும் வலி குறையவில்லை. தலையணை இல்லாமல் படுத்து உறங்கினால் கழுத்து வலி குறையும் என்று சிலர் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார்  சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் முதலில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள கழுத்துவலிக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். எலும்பு, மூட்டு மருத்துவரையோ, வலி நிர்வாக மருத்துவரையோ அணுகினால், அவர் 'ஸ்பைனல் மவுஸ்' (Spinal Mouse) என்ற பிரத்யேக கருவியின் உதவியோடு கழுத்துப் பிரச்னைக்கான தீர்வைக் கண்டுபிடிக்கலாம். அதன் பிறகு சிகிச்சையை மருத்துவர் முடிவுசெய்வார். பொதுவாக  நூறு பேரில் 80 பேருக்கு கழுத்து பின்பக்கமாக வளையும் தன்மை இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தக் காரணத்தால் கழுத்துவலி வந்திருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள், சாதாரண தலையணை ...

தைவானைச் சுற்றி வட்டமடிக்கும் சீன ராணுவம்... உச்சக்கட்ட பரபரப்பின் பின்னணி!

கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடு தைவான். சீனாவின் தென் கிழக்கு கடற்கரையிலிருந்து சுமார் 110 மைல் தொலைவில் தைவான் அமைந்திருக்கிறது. தைவானை தன்னிடமிருந்து பிரிந்துசென்ற ஒரு மாகாணமாகவே சீனா பார்த்துவருகிறது. எனவே, தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று சீனா நினைக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றார். அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, தைவானைச் சுற்றி சீனா ராணுவப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தது. இது, அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தைவான் தனது ஆளுகைக்கு உள்பட்ட பகுதி என்று சீனா உரிமை கோருவதற்கு நீண்ட வரலாற்று பின்னணி இருக்கிறது. ஜப்பானின் பிடியில் இருந்த தைவான், இரண்டாம் உலகப் போரில் சீனாவால் ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பிறகு, தைவானிலிருந்து ஜப்பான் வெளியேறியது. சீனக் கொடியும், தைவான் கொடியும் அதன் பிறகு, சீனக் குடியரசின் அதிகாரப்பூர்வ பகுதியாக தைவான் மாறியது. அடுத்த சில ஆண்டுகளில், சீனாவில் உள்நாட்டுப் போர் மூண்டது. அப்போது சீனாவின் ராணுவத் தளபதியான சாங் காய் ஷேக்கின் ராணுவம், பு...

Doctor Vikatan: கழுத்து வலி உள்ளவர்கள் தலையணை இல்லாமல் உறங்க வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான கழுத்து வலி இருக்கிறது. ஜெல், ஆயின்மென்ட், வலி நிவாரணி எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்த பிறகும் வலி குறையவில்லை. தலையணை இல்லாமல் படுத்து உறங்கினால் கழுத்து வலி குறையும் என்று சிலர் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார்  சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் முதலில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள கழுத்துவலிக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். எலும்பு, மூட்டு மருத்துவரையோ, வலி நிர்வாக மருத்துவரையோ அணுகினால், அவர் 'ஸ்பைனல் மவுஸ்' (Spinal Mouse) என்ற பிரத்யேக கருவியின் உதவியோடு கழுத்துப் பிரச்னைக்கான தீர்வைக் கண்டுபிடிக்கலாம். அதன் பிறகு சிகிச்சையை மருத்துவர் முடிவுசெய்வார். பொதுவாக  நூறு பேரில் 80 பேருக்கு கழுத்து பின்பக்கமாக வளையும் தன்மை இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தக் காரணத்தால் கழுத்துவலி வந்திருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள், சாதாரண தலையணை ...

மனிதர்களுக்கான மருந்தில் `விலங்கு லோகோ' அச்சடிக்கப்பட்டது ஏன்? - மருந்து நிறுவனத்தின் விளக்கம்!

கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கர்நாடக மாநில மருத்துவப் பொருள்கள் கார்ப்பரேஷன் லிமிடெட் (KSMSCL) சில மருந்துகளை அனுப்பியுள்ளது. இந்த மருந்துகளை வாங்கிய நோயாளிகள் அதிர்ந்து போயுள்ளனர். அந்த மருந்துகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் லோகோ இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தலாமா என மக்கள் குழம்பியுள்ளனர். medicines எங்கு தவறு நடந்தது?! மருந்துகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனமான புஷ்கர் பார்மா லிமிடெட் நிறுவனத்திடம் (Pushkar Pharma) இருந்து, மூக்கினுள் செலுத்தப்படுகிற மருந்துகள் (Nasal Solutions) மற்றும் கண் சொட்டு மருந்து உட்பட 62.9 லட்சம் மதிப்பிலான ஏழு வெவ்வேறு மருந்துகளை இந்தாண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி  கார்ப்பரேஷன் வாங்கி இருந்தது. மாநிலத்தில் உள்ள அனைத்து கிடங்குகளுக்கும் இம்மருந்து தயாரிப்புகள் வழங்கப்பட்டன.  மருந்துகளின் லேபிலில் சுகாதாரத் துறையின் லோகோவிற்கு பதிலாகத் தவறாக கால்நடை பராமரிப்புத் துறையின் லோகோ இருந்ததை அதிகாரிகள் பின்னர் கவனித்துள்ளனர்.  இதனை விசாரித்தபோது, `இது வெறும் அச்சுப்பிழை தான். மருந்துகள் மனித பயன்பாட்டிற்குப் பாது...

Doctor Vikatan: இரவு நேரத்தில் நாவறட்சி, பாதிக்கப்படும் தூக்கம்... என்ன காரணம், தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 50. இரவு நேரத்தில் தொண்டை வறண்டு போவதாக உணர்கிறேன். அதற்காக தண்ணீர் குடித்தால் இரண்டு மணி நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. தூக்கம் கெட்டுப் போகிறது. இதற்கான தீர்வு என்ன? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் இரவு நேரத்தில் ஏற்படும் தொண்டை வறட்சிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஜலதோஷம், சைனஸ் தொற்று, அலர்ஜி போன்ற பிரச்னைகள் இருந்தால் இரவு நேரத்தில் தொண்டை வறண்டு போகிற மாதிரி இருக்கும். உடனே சிறிது தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும்.  சிலருக்கு வாயைத் திறந்துகொண்டு தூங்கும் பழக்கம் இருக்கும். அந்தப் பழக்கத்தாலும் இரவில் தொண்டை வறட்சி ஏற்படலாம். சைனஸ், குறட்டை, 'அப்ஸ்ரக்ட்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive sleep apnea) பாதிப்பு என  வாயைத் திறந்துகொண்டே தூங்கும் பழக்கத்துக்கும் பல காரணங்கள் இருக்கலாம்.  ஒருவேளை நாவறட்சி ஏற்படுகிறது என்றால், அது உடலில் நீர்ச்சத்து குறைவதன் அறிகுறியாகவும் இருக்கலாம். அதற...