Doctor Vikatan: வருடத்தில் பெரும்பாலான நாள்களில் சன் ஸ்கிரீன், ஃபேஸ்வாஷ், மாய்ஸ்ச்சரைசர் எல்லாம் உபயோகிக்கிறோம். சம்மர் சீசனில் அவற்றையே தொடர்ந்து உபயோகிக்கலாமா.... வெயிலுக்கேற்றபடி வேறு மாற்ற வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா Doctor Vikatan: சீரற்ற பல்வரிசை... வெளியே தெரியாமல் க்ளிப் போடுவது சாத்தியமா? கோடையின் தாக்கத்திலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க, வெறும் சன் ஸ்கிரீனை மட்டும் மாற்றினால் போதாது. கிளென்சரில் இருந்தே மாற்றங்களைச் செய்ய வேண்டும். பருக்கள் வரும் சருமம் என்றால் சாலிசிலிக் ஆசிட் உள்ள கிளென்சர் பயன்படுத்த வேண்டும். ரொம்பவும் சென்சிட்டிவ்வான சருமம் கொண்டவர்கள், லாக்டிக் ஆசிட் உள்ள கிளென்சர் பயன்படுத்தலாம். அடுத்து மாய்ச்ச்சரைஸர்... இது ஜெல் வடிவிலோ, நீர் வடிவிலோ, லோஷன் வடிவிலோ இருக்கும்படி தேர்ந்தெடுங்கள். முன்பெல்லாம் சன் ஸ்கிரீன் பயன்படுத்தும்போது உடனடியாக ஒருவித சூடான உணர்வு ஏற்படும். அதைத் தடவியதும் வியர்த்துக் கொட்டும். அப்படியில்லாமல் இப்போது கூலிங் த...