Skip to main content

Everest: ``மசாலா தயாரிப்பில் அதிக அளவு பூச்சிக்கொல்லி..?" எவரெஸ்ட் நிறுவனத்தின் விளக்கம்..!

எவரெஸ்ட் நிறுவனத்தின் மசாலா தயாரிப்புகள் சிங்கப்பூர், ஹாங்காங்கில் தடை செய்யப்படவில்லை என எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது.

சோதனையும் அதிர்ச்சியும்...

சமீபத்தில் எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்திய நிறுவனங்களின் மசாலா தயாரிப்புகளை ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு மையம் சோதனை செய்தது. ஹாங்காங்கின் சிம் ஷா சூயிலுள்ள மூன்று கடைகளில் இருந்த இந்நிறுவனங்களின் மசாலா மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியது. 

சோதனையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் எம்.டி.ஹெச் நிறுவனத்தின் தயாரிப்புகளான மெட்ராஸ் கறித்தூள், சாம்பார் மசாலா, குழம்புப் பொடி மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்புப் பொடி ஆகியவற்றில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய எத்திலீன் ஆக்ஸைடு என்ற பூச்சிக்கொல்லி சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

இந்தத் தயாரிப்புகளை சமையலில் சேர்த்து உண்ணும் போது உடல் நல பிரச்னைகள் உண்டாவதோடு, புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகளும் உள்ளன. 

அதிரடி நடவடிக்கை…

இதனையடுத்து சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, விற்பனைக்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்களை அகற்ற வலியுறுத்தப்பட்டது. அதோடு இந்த இரண்டு இந்திய பிராண்டுகளின் மசாலா பொருள்களை வாங்க வேண்டாம் எனத் தனது நாட்டு மக்களை ஹாங்காங் எச்சரித்தது. 

ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு மையத்தின் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்ட சிங்கப்பூர் அரசும் அந்நாட்டில் ஏற்றுமதி செய்த மசாலா பொருள்களை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவிலும் இம்மசாலா பொருள்களை சோதனை செய்யும்படி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

எவரெஸ்ட் நிறுவனத்தின் பதிலென்ன?!... 

இந்தக் களேபரங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் தன் அனைத்து தயாரிப்புகளும் பாதுகாப்பானவை மற்றும் உயர் தரம் வாய்ந்தவை என்று வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து எவரெஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``எவரெஸ்ட்டின் தயாரிப்புகள் எந்த நாட்டிலும் தடை செய்யப்படவில்லை. 60 எவரெஸ்ட் தயாரிப்புகளில் ஒன்று மட்டுமே ஆய்வு செய்யப்பட்டது. இது ஒரு நடைமுறையேயன்றி, தடை அல்ல. 

spices (Representational Image)

எங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பானவை மற்றும் உயர் தரம் வாய்ந்தவை என்பதை நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறோம்.

எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கடுமையான தரக் கட்டுப்பாடு சோதனைகளுக்கு உட்படுகின்றன. இந்திய ஸ்பைஸ் போர்டு ஆய்வகங்களில் (Spice Board of India)  இருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுகின்றன'' என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

குழந்தைகளுக்கான இருமல் மருந்து, செரிலாக், தற்போது மசாலாக்கள் என தொடர்ந்து இந்திய தயாரிப்புகள் மீதான உலக நாடுகளின் நம்பிக்கை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது.

உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவில் விஷத்தை கலப்பதை என்னவென்று சொல்வது?!


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...