கழுத்துப் பகுதியில் கட்டி, அதீத உடல்பருமன் ஆகியவற்றுக்கு ஆளானவர்களுக்கு அது தைராய்டு பிரச்னை எனச் சொல்லிக் கேட்டிருப்போம். தைராய்டு குறித்த முழுமையான விழிப்புணர்வு பரவலாக ஏற்படவில்லை. தைராய்டு பிரச்னை ஏன் ஏற்படுகிறது, எப்படித் தடுப்பது என விளக்குகிறார் திருச்சி, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அனீஸ் . Dr. B. Anis. Oncology Dept, M.B.B.S., M.S., M.R.C.S., M.C.H. Kauvery Hospital, Trichy Doctor Vikatan: தைராய்டு பாதிப்பு உள்ளவர்களால் எடையைக் குறைக்க முடியாது என்பது உண்மையா? தைராய்டு கிளாண்ட் ``நமது உடலில் பிட்யூட்டரி கிளாண்ட், அட்ரீனல் கிளாண்ட், கயைணம் என பல எண்டோகிரைன் கிளாண்ட்கள் (Endocrine gland) இருக்கின்றன. அவற்றில் தைராய்டு கிளாண்டும் ஒன்று. இது நமது கழுத்துப்பகுதியில் சுவாசக் குழாய்க்கு மேலேயும், பேச்சுக்குழாய்க்கு கீழேயும் இருக்கும். இது ரைட் லோப், லெஃப்ட் லோப், இஸ்துமஸ் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. தைராய்டு கிளாண்டின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பது. தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் தொடங்கி, உண...