அமெரிக்காவில் பலத்த பனிக்காற்று வீசி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 1,400 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சீனாவில், நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் அந்த நாட்டு தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால், அந்த நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அந்த நாட்டு அமைச்சர்கள் ஸ்டார் ஹோட்டலில் தங்குவது போன்றவற்றைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. 7 வயது பூட்டான் இளவரசரான ஜிக்மே நம்கெல் வாங்சுக் (Jigme Namgyel Wangchuck) அந்த நாட்டின் முதல் டிஜிட்டல் குடிமகனானார். கம்போடியாவில் 11 வயது சிறுமி பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார். 2014-க்குப் பிறகு H5N1 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் இவரே. உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில், ஸ்பெயின் நாட்டுப் பிரதமர் பெட்ரோ சா...