Skip to main content

புதுச்சேரி: முதல்வருக்கு மரியாதை தராத குற்றச்சாட்டு - பெண் ஐபிஎஸ் அதிகாரி பணியிட மாற்றம்!

புதுச்சேரியில் பட்ஜெட் ஆண்டு இறுதி செய்தவதற்கான கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக வந்த முதல்வர் ரங்கசாமிக்கு சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி தீபிகா ஐ.பி.எஸ் மரியாதை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏ-க்கள் ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர் லட்சுமி காந்தன், சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் உள்ளிட்டவர்கள் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தைச் சந்தித்து புகாரளித்தனர். அத்துடன், ”சீனியர் எஸ்.பி தீபிகா முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. எம்.எல்.ஏ-க்கள் கூறும் பரிந்துரைகளையும் ஏற்பதில்லை. அதனால் அவரை மாற்றிவிட்டு தமிழ் தெரிந்த ஐ.பி.எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உள்துறை அமைச்சரிடம் புகாரளித்த என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள்

அதனடிப்படையில் தலைமை செயலாளர் ராஜிவ் வர்மா, டி.ஜி.பி மனோஜ்குமார் லால் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டார் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். அதன் தொடர்ச்சியாக முதல்வரை அவமதித்த சீனியர் எஸ்.பி தீபிகா விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார் என்று சபாநாயகர் செல்வமும் கூறியிருந்தார். இந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் இருக்கும் 8 ஐ.ஏஸ்.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். அதில் சீனியர் எஸ்.பி தீபிகாவை ஜம்மு காஷ்மீருக்கும், காரைக்காலிலிருந்த சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி லோகேஷ்வரனை மிசோராமுக்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார் மத்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங். அதேபோல மிசோராமில் தற்போது பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி குலோத்துங்கன், டெல்லியில் பணிபுரியும் பிரிஜேந்திர குமார் யாதவ் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...