அமெரிக்காவில் பலத்த பனிக்காற்று வீசி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 1,400 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
சீனாவில், நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் அந்த நாட்டு தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால், அந்த நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அந்த நாட்டு அமைச்சர்கள் ஸ்டார் ஹோட்டலில் தங்குவது போன்றவற்றைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
7 வயது பூட்டான் இளவரசரான ஜிக்மே நம்கெல் வாங்சுக் (Jigme Namgyel Wangchuck) அந்த நாட்டின் முதல் டிஜிட்டல் குடிமகனானார்.
கம்போடியாவில் 11 வயது சிறுமி பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார். 2014-க்குப் பிறகு H5N1 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் இவரே.
உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில், ஸ்பெயின் நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்சஸ் (Pedro Sánchez) உக்ரைன் சென்றடைந்தார். போர் குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ் விரைவில் பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாகியான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் நேற்று அறிவித்திருக்கிறார்.
லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் வாசலில் பெரிய வடிவில் உக்ரைன் கொடி வரையப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.டிக் டாக்
ஐரோப்பிய ஆணையம் அதன் ஊழியர்களின் கைப்பேசியிலிருந்து டிக் டாக் செயலிகளை அகற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறது. இணைய வழி தரவுகளைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
லெபனன் மத்திய வங்கியின் ஆளுநர் ரியாட் சலாமே (Riad Salameh) பண மோசடி வழக்கில் சிக்கியிருக்கிறார். ஆனால், அதை அவர் மறுத்திருக்கிறார்.
http://dlvr.it/SjzDF2
http://dlvr.it/SjzDF2
Comments
Post a Comment